உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

117

தேவமாதின் அழகுவாய்ந்த அப்பெண்மணியின் தீர் மானத்தைத் தான் பெற்றுக்கொண்ட பொழுது இளைய நீலலோசனன் தன் நெஞ்சத்துள் துணுக்கென ஒரு மகிழ்ச்சி கொண்டான்: இங்ஙனம் எழுந்த உள்ளப் பெயர்ச்சியினைத் தகுதியான மரியாதைத் தோற்றத்தின் கீழ் அடக்கிக் கொண்ட வனாய், “நங்கைமீர் அம்மக்களை அக்குடிசைக்கு எடுத்துக் கொண்டு போக உதவி செய்யும்பொருட்டு இப்போது விரைந்து போகின்றேன். கட்டாயமாய் வேண்டிய அளவுக்குமேல் ஒரு நிமிஷமேனும் யான் அங்கு நீட்டித்திரேன் என்று உறுதியாய் நம்பியிருங்கள்.” என்று கூறினான்.

மறுபடியும் அப்பௌத்த இளைஞன் ஊக்கம் மிகுந்த தன் குதிரைமேல் ஏறிப்போயினான்; அவன் காதுக்கெட்டுந் தூரங் கடந்து சென்றபின், “அவ்வளவு கருணையோடு தரப்பட்டவழித் துணையை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு செய்யக் கூடியதில்லை." என்று குமுதவல்லி மொழிந்தாள்.

தன்மையோடும்

-

ஓரோவொருகால், தன் நினைவுகளின் கன்னிமைத் தூய மிகநெடுந்தூரம் அல்லா மேற்கணவாய் மலைகளின்மேல் எந்நேரமும் தங்கியிருக்கும் பனிபோல் தூய தான தன்னுயிரின் இயற்கைக் கற்புடைமையோடும் அவ்விளங் கன்னிப்பெண், நீலலோசனனைப் பற்றி இன்னும் ஏதோ மிகுதியாக காணவேண்டும் நினைவிலே மெய்யாகவே வெறுப்ப டையாத ஓர் இரகசிய எண்ணந் தன்னுள்ளே கொள்ளப் பெற்றாள். ஏனெனில், ஆண்பாலருள் அழகால் மிக்கவ ரென்றும் பெண்பாலருள் அழகால் மிக்கவரென்றும் நன்கு மதிக்கப்படும். இளையோர் இருவர் ஒருவர் ஒருவர்மாட்டு ஏதோ சிறிதுபற்று உண்டாகப் பெறாமல் ாகப் பெறாமல் இங்ஙனங் தற்செயலாய் ஒருங்கு கூட்டப்படுதல் கூடாததேயாம்.

நீலலோசனன் திரும்பிவரும் முன் ஏறக்குறைய இரண்டரை நாழிகை கழிந்தன; இப்பொழுது அவன் ஆட்கள் இருவரும் அவன்பின்னே வந்தார்கள். அந்தப்பெருமாட்டியோடும் அவள் தோழிப்பெண்களோடும் சேர்ந்து பயணம்போகும்படி ஏற்பாடு செய்யப்பட்டதென்று முன்னமே அவன் அவர்கட்குத் தெரிவித் தான். இச்செய்தியை வியாக்கிரவீரன் மகிழ்வோடு கேட்டான், னன்றால், பெண்பாலார் கூட்டத்திற் சேர்ந்திருப்பது அவனுக்கு இனியது: மற்றுக் கேசரிவீரனோ

இதனைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/146&oldid=1581404" இலிருந்து மீள்விக்கப்பட்டது