உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 13

கேட்டதும் தன்முகத்தின்மேல் துயரக்குறிப்பு உடையவ

னானான்.

தன் வாலிப எசமானன் பொய்ந்நெஞ்சுள்ள மற்றொரு மோகினிப் பேயின் வசத்தில் அகப்பட்டால் என் செய்வதென்று அஞ்சினான்; என்றாலும், இப்படிப்பட்ட நிலைமையில் தடுத்துச்சொல்வதற்கு அவன் அவ்வளவு தயாளம் அற்றவன் அல்லன். பயங்கரமான அபயாத்தினின்றும், திகிலான மனக் கலக்கத்தினின்றும் இப்பொழுதுதான் தப்பிய ஆதரவில்லாப் பெண்கள் மூவரும் தாங்கள் இழந்துபோனதற்கு மாறாக வேறொரு வழித்துணை உறுதிப்படுத்திக்கொள்ள ஆவல் உள்ளவராய் இருக்கக்கூடுமென்றும், மக்கள் உறவின் நியமத் திற்கும் மக்கள் இயல்பின் நியமத்திற்கும் இணங்க அவர்கள் அங்ஙனந் துணைநாடுவதற்கு உரிமையுள்ளவர் களென்றும் அவன் இயற்கையாகவே உணர்ந்தான். ஆனால், நீலலோசனனும் அவன் ஆட்களும் குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரையும் வந்து சேர்ந்தபோது, கேசரிவீரன் ஐயுற்றுப் பார்த்த பார்வை வரவரத் தெளிவடைந்தது; ஏனெனில், ஏதோ சொல்லமுடியாத இனிமையும், களங்கமற்ற நெஞ்சக்குறிப்பும், வசீகரமும், பிரியமும் குமுதவல்லியின் முகத்திலே காணப் பட்டமையால், அவநம்பிக்கையும் முன் எச்சரிப்பும் உள்ள கேசரிவீரனுங்கூட அத்தெய்வீக முகத்திலே எழுதப்பட்ட சான்றுக்கு இணங்காத வனாய் இருக்கக்கூடவில்லை.காமக் கொதிப்பும் காமவிழைவும் உள்ள கருவிழியாளான மீனாம்பாளையும் தூய்மையும் கள்ளமின்மையும்ஆகிய ஒளியினாற் சூழப்பட்ட நீலவிழி யாளான குமுதவல்லியையும் அவன் தன் மனத்துள்ளே விரைவில் ஒப்பிட்டுப்பார்த்த போது இவளைப் பற்றி அவன் மிகவும் நல்லெண்ணங் கொள்ளாமல் இருக்கக்கூட வில்லை. இன்னும் இவள் பாங்கிமார் இருவரிடத்தும் கரவில்லாத வெளிப் படையான தாராள குணத்தையும் நாணமுடன் மரியாதை நிறைந்த ஒழுக்கத்தையும் கண்டபோது, தன் வாலிப எசமானன் இவர்கள் புதுஉறவைப் பெற்றதற்காக வருந்துதல் ஒழிந்தான் மற்று, இத்தனை இனிமைவாய்ந்த இவர்கள் வழித்துணையாவது பாதுகாப்பாவது இல்லாமல் வழியே ஏகுவதற்கு விடப்படா மையை நினைக்கும்போது தன்னுள்ளே ஒரு மகிழ்ச்சியும் மனத்திருத்தியும் உண்டாதலை உணர்ந்தான்.

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/147&oldid=1581407" இலிருந்து மீள்விக்கப்பட்டது