உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

119

நீலலோசனன் குமுதவல்லியின் பக்கத்தே குதிரை ஊர்ந்து சென்றான். கேசரிவீரன் சுந்தராம்பாளுக்குத் துணையாய் ஏகினான்... வியாக்கிரவீரன் ஞானாம்பாளுடன் தன்னை இணைத்துக் கொண்டான். மீனாம்பாள் குமுதவல்லி என்னும் இருவரின் இயற்கை மாறுபாட்டைப் பற்றிக் கேசரிவீரன் உள்ளத்தில் தோன்றியது போலவே, நீலலோசனனுள்ளத்திலுந் தோன்றுவதாயிற்று. தன் நெஞ்சம் குமுதவல்லியினிடத்து விளங்கிய விழைவுகூரத்தக்க இனிய அழகின் வசப்பட வேண்டுவதாயிருக்க, ஒரு கணப் பொழுதேனும் தான் மீனாம் பாள் அழகினால் மயக்கப்பட்டது என்னை என்று அவன் வியப்படைந்தான். அவன் மீனாம்பாளைக் கண்ட போது குமுதவல்லியை இதற்குமுன் என்றும் பார்த்ததில்லை என்பதும், பெண்பாலாரில் அத்துணை நிகரற்ற வடிவம் ஒன்று உலகத்தின் கண் உள்ளதெனக் கருதியது இல்லை என்பதும் உண்மையே: ஆனால் இந்த எண்ணமுங்கூட, அவன் தான் சிறிது நேர மாயினும் கரியவிழி மீனாம்பாளின் காமங்கனிந்த மிக்க அழகினுக்கு வணங்கியதனால், தன் நெஞ்சமானது இப்போது தோழமை கொண்ட நங்கையின் தூய கன்னிமை அழகினு செலுத்தற்கு உரிய வணக்கம் என்னுந் தூய தூபத்திற்கு இ பெறத் தகுதியல்லாததாயிற்று என்று உணரும் உணர்ச்சி யினின்றும் அவனை மாற்றாதாயிற்று.

டம்

பொதுவான பலதிற விஷயங்களைப் பற்றிப் பேசியபிறகு குமுதவல்லி, “ஐயன்மீர், இந்தப் பிரதேசத்தில் வழிதப்பித் திரியுங் காட்டு மிருகம் ஒன்று மாத்திரமே அஞ்சத்தக்க அபாயம் ஆகாதென்று சொல்லக்கேட்டேன்.” என்றாள்.

"நங்கைமீர்! உண்மையே! வேறு யாது அபாயம் உங்களுக்கு இவ் அச்சத்தை உண்டு பண்ணியது?” என்று நீலலோசனன்

வினாவினான்.

66

திகிலை உண்டாக்கும் நல்லானைத்தவிர வேறொன்றும் அன்று,” எனக் குமுதவல்லி விடைபகர்ந்தாள்.

அதற்கு நீலலோசனன் “ஆ!” என்று உரத்துக் கூவினான்; இங்ஙனங்கூவிய ஓசை புதுமையாகத் தோன்றினதனால், ஓர் இமைப்பொழுது குமுதவல்லி அவனை உற்றுப்பாராமல் இருக்கக்கூடவில்லை. அழகிய அவ்விளம்பெண் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/148&oldid=1581408" இலிருந்து மீள்விக்கப்பட்டது