உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம்

13

திகிலை மிகுதிப்படுத்துவதற்கு அஞ்சி உடனே அவன் “ஆம், அப்படிப்பட்டது ஏதோ யானும் கேள்விப்பட்டேன்: ஆனாலும் நங்கைமீர் அஞ்சாதேயுங்கள்!” என்று கூறினான்.

L

“என்மட்டில், அதைப்பற்றி யான் சிறிதும் அஞ்சவில்லை; ஆகையால், நான் என் தோழிப் பெண்கள் மனத்திலும் கலவரத்தை உண்டு பண்ணாதிருந்து விடுகின்றேன்.” என்று குமுதவல்லி தொடர்ந்து பேசினாள்.

"நங்கைமீர்! நீங்கள் செய்வது நல்லது, தீமையும் ஆபத்தும் வரும்முன் பாதிவழியிற் சென்றே அவற்றை எதிர்க்க ஓடாமல், அவை வரும்போது எதிர்ப்பதே போதும். நாளைக்கு நாம் நீலகிரியில் இருப்போம்--அங்கே போய்விட்டோமானால் அச்சம் சிறிதும் இல்லை." என்று நீலலோசனன் மறுமொழி புகன்றான்.

மலையநாட்டின் தலைநகரான நீலகிரிக்குத் தாம் இன்ன காரியத்தின் பொருட்டுப் போகின்றார்கள் என்பதைப்பற்றி நீலலோசனனாவது குமுதவல்லியாவது சிறிதாயினும் ஒருவரோ L ாருவர் மறந்தும் பேசவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் உசாவியதில் வெறும் பெயர் மாத்திரந்தான் சொல்லிக் கொண்டார்கள்: இவ்விஷயத்திலுங்கூடச் சிலவற்றைச் சொல் லாமல் அடக்கி விட்டார்கள்; நீலலோசனன் தான் அரசிளை ஞன் என்பதைத் தெரிவித்திலன்--குமுதவல்லியும் தான் அரசி என்பதைத் தெரிவித்திலள். சில வயணங்களால் இருவரும் இங்ஙனம் அடக்கமாய் இருந்தனர்; ஏனென்றால், இதனைப் படிப்போர் ஏற்கெனவே தெரிந்தபடி இவ்விருவரும் மறைவாகப் பிரயாணஞ் செய்யும் படிக்கும், தாம் மறைவாகச் செல்வது சிறிதுந் தெரியாதபடிக்கும் வற்புறுத்தப்பட்டார்கள்.

இப்போது மாலை இரண்டரை நாழிகை வேளை ஆயிற்று. தன்னிடத்திலிருந்து நீலகிரி நகரம் ஏறக்குறைய இருபத்தைந்து மைல் தூரம் அல்லது ஒருநாட் பயணத்திலுள்ளதும், அவ்விராப் பொழுதிற்குத் தாம் தங்க வேண்டியதுமான ஓர் ஊர் நம்முடைய பிரயாணிகள் பார்வைக்குத் தென்படலாயிற்று. நீலலோசனனுங் குமுதவல்லியும் தத்தம் துணைவர்க்குச் சிறிது முன்னே குதிரை ஊர்ந்து சென்றார்கள்--அப்போது ஒன்று நேர்ந்தது. அது பார்வைக்கு அற்பமானதொன்றாய்த் தோன்றினாலும், இதனால் விளைந்தவை முக்கியமானவைகள். பாட்டை ஓரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/149&oldid=1581409" இலிருந்து மீள்விக்கப்பட்டது