உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

121

பார்க்கப் பரிதாபமான முதியோன் ஒருவனும், அவனைப் போலவே ஏழ்மையான முதியோள் ஒருத்தியும் உட்கார்ந்திருந் தனர்--இவர்கள் இருவரும் முடவர்கள்--இருவரும் உறுப்பு அற்றவர்கள்--இருவரும் பிச்சைக்காரர்க்குரிய கந்தைத் துணி கட்டியிருந்தார்கள். நீலலோசனனுங் குமுதவல்லியும் முன் சென்ற போது இவ்விருவரும் பிச்சை கேட்பதற்கு நொண்டி எதிரே வந்தனர். இப்பிச்சைக்காரரின் பரிதாபமான நிலைமை யைப் பார்த்தபோது நம் இளைய தலைவனுந் தலைவியுமான இருவருக்கும் ஒருங்கே இரக்கம் உண்டாயிற்று: ஆகவே இருவருந் தமது பணப்பையை இழுத்தார்கள். குமுதவல்லி ஒரு பொன் நாணயத்தை முடத்தி கையில் வைத்தாள்; நீலலோசனனும் அவ்வாறே தளர்ந்த அம்முதியோனுக்கு உதவி புரிந்தான். ஆனால் அச்சமயத்தில் நீலலோசனன் குதிரையானது ஏதோ பதறி அசைந்தது; இதனால் அவன் பணப்பையினுள்ளேயிருந்த சில நிலத்தே விழுந்தன. நன்றியறிவுள்ள அம்முதிய முடவர்கள் அவற்றைப் பொறுக்கியெடுத்து உடையவனிடம் சேர்ப்பிக்க விரைந்தனர்: ஆனால் அங்ஙனங் கீழே விழுந்த பொன் நாணய வெள்ளி நாணயங்களுக்கு இடையிலே, பாம்பின் மினுக்கொளி போலக் குமுதவல்லியின் கண்களைத் திடீரெனக் கவர்ந்தது ஒன்று கிடந்தது. அஃது ஒரு மோதிரம்! ஆம்-ஒருவகையான வேலைப்பாடு அமைந்ததாய் ஒரே சிவப்புக்கல் பதிக்கப்பட்ட ஒரு பொன் மோதிரம்! நீலலோசனன் அவசரமாய் அம்மோதிரத் தயும் அந்நாணயங்களையும் தன் பணப்பையினுள்ளே வைப்பானாயினான்; குமுதவல்லி கலக்கமுற்ற தன் பார்வையை அப்புறந்திருப்பிக் கொண்டாள்; அவள் நெஞ்சமோ நோய்ப் படுத்தும் உணர்வால் தாக்குண்டது.

அவள் உள்ளத்திற் பொல்லாத எண்ணங்கள் பல மின்ன லெனத் தோன்றின. நல்லானைப் பற்றி அந்தச் சத்திரக்காரன் தனக்குச் சொல்லிய ஒவ்வொன்றையும் அவள் நினைவு கூர்ந்தாள். அவன் இளைஞன்--அந்தச் சத்திரக் காரனுக்கு மகனென்று சொல்லும்படி அவ்வளவு இளைஞன்! அவனுக்கு கரிய தலைமயிரும் மீசையும் இருந்தன. அவன் உயரமாய் ஒல்லியாயிருந்தான்; குமுதவல்லியுந் தான் தன் அறைக்குள் முகமறைப்பிட்டு வந்தவனைக் கீழ்க்கண்ணாற் பார்த்த பார்வை யிலும் அவன் அப்படியே இருந்தானென நினைத்தாள். அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/150&oldid=1581410" இலிருந்து மீள்விக்கப்பட்டது