உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

மறைமலையம் - 13

விவரமெல்லாம் நீலலோசனனிடம் ஒத்திருந்தன! அதுவல்லா மலும், நல்லான் பலவகையான வேடங்களும் எடுப்பவன்; ஒருநாள் துருக்கனைப் போலவும் மற்றொரு கால் மலை நாடனைப் போலவும் உடை அணிபவன்: ஏனென்றால் பொல்லாத தன் கெட்ட நோக்கங்களை முடிப்பதற்கு அவன் செய்து பாராத உபாயம் இல்லை. சுருங்கச் சொல்லுமிடத்துக் குமுதவல்லி, தன் பக்கத்தே குதிரைமேல் வருபவன் கள்வர் கூட்டத் தலைவனான பயங்கர நல்லானையன்றிப் பிறர் அல்லர் என்னும் திகிலும் வருத்தமும் மிக்க ஓர் உறுதி எண்ணங் கொள்ளப் பெற்றாள்!

பிச்சைக்காரரிடம் நிகழ்ந்த இச் சிறுநிகழ்ச்சிக்குப் பின் அவளும் நீலலோசனனும் வழிச் செல்கையில், சிறிது நேரம் அவள் முகம் அப்புறமாகவே திரும்பி இருந்தது. இந்த நேரத்திற்குள் அவள் தன் முகச்சாயலை அமைதிப்படுத்திக் கொண்டாள்--தன்னையுந் தானே திடப்படுத்திக் கொண்டாள். இனி எப்படி நடந்து கொள்வதென்றும் தன் மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டாள்; ஏனெனில், உடனே ஏதும் அபாயம் நேராதென்று கண்டறிந்தாள்: அந்தச் சிறுபட்டிக்காடு இப்போது அருகாமையில் வந்து விட்டது; தன் தோழனும் அவன் துணைவரும் தனக்குந் தன் பாங்கிமார்க்கும் விரைவில் தீங்கு செய்யக் கருதியிருந்தார்களாயின், ஊருக்கு நெடுந் தூரத்தில் தனிமையிலிருந்த வெளிகளிலே அவ்வாறு செய்திருப் பார்களன்றோ?

அவள் கலக்கமில்லாத குரலிலே, “ஐயன்மீர்! வாருங்கள், நாம் குதிரையை முடுக்கி முன் விடுவோம்!” என்றுரைத்தாள். அதற்கு நீலலோசனன் “நங்கைமீர், தங்கள் விருப்பப்படியே,” என்று நேசநயம் மிக்க மகிழ்ந்த குரலிற் கூறினான்; ஏனென்றால், குமுதவல்லி இப்போது தன்னைப்பற்றிக் கொண்ட திகிலான எண்ணத்தை அவன் சிறிதும் அறியான்.

சில நிமிஷங்களுக்கெல்லாம் அச்சிறிய ஊர்போய்ச் சேர்ந்தனர். அவ்வூரில் தட்டுக்கெட்ட ஒரு சத்திரமும் ஆறு ஏழைக் குடிசைகளும் சிறிது விலகியிருந்த ஒரு நல்ல வீடும் இருந்தன. அந்த வீட்டுக்கு உடையவன், அடுத்திருந்த ஒரு பஞ்சாலைக்குச் சொந்தக்காரனான பணக்கார வியாபாரி ஒருவன். அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/151&oldid=1581411" இலிருந்து மீள்விக்கப்பட்டது