உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

.

123

-னே

சத்திரத்தண்டை போனவுடனே, குமுதவல்லி அந்த நல்ல வீட்டுக்கு உடையவர் தனக்குந் தன்தோழிப் பெண்கட்கும் விடுதி தந்து உதவக்கூடுமோ என்று கேட்டாள். அச்சமயத்தில் அப்பஞ்சாலைத் தலைவன் அச்சத்திரத்திற்கு எதிரிலே நின்று காண்டிருந்தான்; குமுதவல்லி குறிப்பிட்ட வீட்டுக்காரன் தானே என்று அவன் அறிவித்ததன் மேல், நீலலோசனன் அந்நங்கைக்கும் அவள் தோழிமார்க்கும் உதவியாகத் தா அவனைப் பரிந்து கேட்டான். அந்த வீட்டுக்காரன் வெடு வெடுப்பான குணமும் லோபத்தன்மையும் உடையவன். அவன் சிறிது தாமதித்தான்; நீலலோசனன் அவன் இயற்கை இன்னதென உணர்ந்து அவன் காதண்டை போய், “இந்த நங்கைக்கும் அவர் தோழிமார்க்கும் செய்யும் உபசாரத் திற் பிசுனத்தனம் பண்ணாதீர்; அதற்காக நீர் பெற்றுக் கொள்ளும் நன்கொடை தாராளமாகவேயிருக்கும்." என்று மெதுவாகச் சொன்னான்.

இங்ஙனஞ் சொல்லவே எல்லா ஏற்பாடும் ஆயிற்று; குமுதவல்லி கேட்டபடியெல்லாம் செய்ய அவ்வீட்டுக்காரன் மிக அன்போடு இணங்கினான். இன்னுந் தன் மனத்துள் நிகழ்வது இன்னதென்று சிறிதும் புலப்படுத்தாமல், பெருமுயற்சியோடு வெளிக்கு ன்சொல்லும் நன்னடையுங் காட்டிக் குமுத வல்லியானவள் நீலலோசனனிடம் விடை பெற்றுக் கொண் டாள்,--அங்ஙனம் விடைபெறும் பொழுது அவன் சொல்லிய படி யே மறு நாட்காலையில் ஒன்று சேர்ந்து பயணம் போவதாக இணங்கி மறுமொழி கூறினாள். அவ்வாறே அவள் பாங்கிமாரும் சிறிது நேரத்திற்கென்று தாம் எண்ணிய விடையைக் கேசரி வீரனிடத்தும் வியாக்கிர வீரனிடத்தும் பெற்றுக் கொண் டார்கள்; பௌத்தர் மூவரும் அந்தங்கெட்ட அச்சத்திரத்திலே விடு டுதி கொள்ளச் செல்கையில், குமுத வல்லியும் அவள் பாங்கிமாரும் அவ்வியாபாரியின் பின்னே அவன் வீட்டுக்குப் போகும் ஒரு சந்தின் வழியே சென்றார்கள்.

சில நிமிஷங்களுக்கெல்லாம் வீட்டண்டை போய்ச் சேர்ந்தார்கள். உடனே குமுதவல்லி, “ பெண்காள், என் பிறகே வாருங்கள்! உங்கள் உயிர் பிழைக்க ஓடிவாருங்கள், ஓடி வாருங்கள்!" என்று உரத்துக்கூவித் தன்குதிரையை விரைந்து பறக்க முடுக்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/152&oldid=1581412" இலிருந்து மீள்விக்கப்பட்டது