உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் 13

"நேசப்பெருமாட்டி! நீங்கள் ஏன் இந்தச் செய்தியை அந்தப் பஞ்சாலைக்காரனுக்குச் சொல்லாமல் இருந்து விட்டீர்கள்?” என்று சுந்தராம்பாள் வினாவினாள். “அவன் தன்னுடைய ஆட்களை ஒன்று சேர்த்துத், தன் குற்றங்களுக்கு உரிய தண்டனையைப் பெறுங் குற்றவாளியாகக் கொடிய நல்லானைச்

சிறை வைத்திருப்பானே."

66

'ஆ, சுந்தராம்பாள்! சடுதியிற் பறந்தோடின என்னைப் பின்பற்றி வந்த நேரத்தில் நம்மைச் சூழ்ந்திருந்த ஆபத்துகளை எல்லாம் இன்னும் நீ உணர்ந்தாயில்லையே. அந்த வியாபாரி நல்லானுடைய ஆள் என்பதற்கு ஐயமே இல்லை;-- அல்லது எப்படியோ அவனுடன் சேர்ந்து புனைசுருட்டுப் பண்ணுகிற வனாயிருக்க வேண்டும். அந்தச் சிறிய ஊரிலுள்ள சிறு சத்திரத்தண்டை போனதும்-- அங்கே சிறிது தூரத்தில் நாம் பார்த்த நேர்த்தியான கட்டிடத்திலே நாம் தங்குவதற்கு இடங் கிடைக்கக் கூடுமாவென்று யான் கேட்டதும்;--அப்போது அம் முதிய வியாபாரி தானே அவ்விடத்திற்கு உரியவன் என்று முன் நின்று அறிவித்ததும்,--அந்தப் போலிப்பௌத்தன் எனக்காகத் தாராளமாய்ப் பரிந்து பேசுவது போல உடனே அவனி ஞ் சென்று கேட்டதும் எல்லாம் நீ கவனித்திலையோ? இன்னும், அப்போது அம்முதுவியாபாரி, துணையற்ற பெண்கள் மூவருக்குந் தீங்கு இழைத்தலைப் பற்றி இரக்கங் கொண் னாய்ப் போலும் சிறிது தடங்கி நிற்க, அதற்குள் நல்லான் தலைகுனிந்து ஏதோ அவன் காதில் முணுமுணுத்ததும், அதனால் உடனே அவ்வியாபாரி தான் நடந்து கொள்ள வேண்டிய வகை இன்னதென நிச்சயிக்கப்பட்டதும் நீ காண்கிலையோ?” என்று குமுதவல்லி மறு மொழிந்தாள்.

“ஆம், பெருமாட்டி, இவையெல்லாம் கவனித்தேன்.” என்று கூவினாள் சுந்தராம்பாள்.

66

“நானும் அப்படியே கவனித்தேன்." என்றாள் ஞானாம் பாள். “ஓ, சமயகுரவர்களே! ஆனால், நான் அவற்றைச் சிறிதுஞ் சந்தேகிக்கவில்லையே!--'

நடுவே குமுதவல்லி, மாந்தர்காள், நாம் மிகவும் பத்திரமாய் ருக்கின்றோம் என்று நினைத்திருக்கும் போதே, நாம் உண்மையிலே அபாயங்களாற் சூழப்பட்டிருக்கும் வகையாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/157&oldid=1581417" இலிருந்து மீள்விக்கப்பட்டது