உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

அறிந்தேன்." என்று குமுதவல்லி தொடர்ந்து உரைத்தாள்.

127

“அவ்வளவு இளம்பருவம் உள்ளவன் அவ்வளவு பெருங் குற்றத்தைச் செய்தானென்று நினைக்க மனந்திடுக்கிடுகின்றதே!” என்றாள் சுந்தராம்பாள்.

“நாம் அவன் ஆட்களின் வழித்துணையாற் பத்திரமா யிருந்தோமென்று உணர்ந்தோமே என்று கூறினாள் ஞானாம்பாள்.

66

‘அந்த மோதிரத்தைப் பற்றிய நிகழ்ச்சிக்கு முன்னே நடந்த ஒரு சிறுகாரியம் உண்டு; அது நிமிஷநேரம் எனக்குப் புதுமை யாகப்பட்டது. அந்த பாசாங்குக்காரப் பௌத்தனுடன் யான் பேசிக் கொண்டிருக்கும் போது, நல்லானைப் பற்றி ஏதோ ஒன்று சொன்னேன்; அப்போது அவன் புதுமையான மாதிரியாய் ஓர் ஓசையிடவே, யான் அவனை உற்றுப் பார்க்க வேண்டிய தாயிற்று. அவன் பேர்பெற்ற கள்வர் தலைவனாகத் தான் இருக்க கூடுமென்று அப்போது யான் சிறிதும் ஐயங்கொள்ளவில்லை. ஆ! அவன் என்னைப் பொய்த்துணை காட்டி ஏமாற்றப் பார்த்தான் என்பதை இப்போது நினைவு கூர்கின்றேன்!--நல்லா னைக் குறித்து என்னை அஞ்சவேண்டாமென்று கற்பித்தான்; என் பெண்களே, ன்று பகலில் நமது பிரயாணத்தில் அச்ச முறுத்தும் அக்கொள்ளைக்காரனைப் பற்றி நீங்கள் திகில் கொள்ளத்தக்க எதனையும் உங்களுக்கு யான் சொல்லாம லிருந்து விட்டேன் என்பதை யான் அவனுக்குத் தெரிவித்த போது அவன் யான் செய்தது நல்லதென்று இசைந்தும் பேசினான். இனி அவ்வுண்மையை உங்களுக்கு மறைத்து வைக்க வேண்டிய சென்ற இரவு நாம்

தில்லை;--அவ்வுண்மையாதெனில்,

உறங்கியதும், எனது மோதிரக்கொள்ளை நடந்தேறியதுமான அந்தச் சத்திரத்திற்கு உரியவனால் யான் பலவகையாலும் எச்சரிக்கப்பட்டிருக்கிறேன். ஆம்--அதுமாத்திரமன்று, நல்லானு டைய உருவ அடையாளங்களைப் பற்றியும் போதுமான அளவுக்குத் தெரிந்து கொண்டேன்; அதனால் அவன் தற்செயலாகக் கீழே விழுத்திய மோதிரத்தைக் கீழ்க்கண்ணாற் பார்த்த அப்பொழுதே அவன்றான் என் பக்கத்திற் குதிரை மேல் வந்தவனென்று தெளிய உணரலானேன்.” என்று குமுதவல்லி மொழிந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/156&oldid=1581416" இலிருந்து மீள்விக்கப்பட்டது