உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் - 13

ஐயமில்லை. ஆனால், நீங்கள் தப்பிப்பிழைத்த ஆபத்தைப் பற்றிச் சிறிதும் அறிய மாட்டீர்கள். திடுக்கிடும் செய்தி ஒன்றைக் கேட்கச் சித்தமாயிருங்கள். முதன் முதல் பேர் ஆண்மைத் தொழிலோடு கூடிய நடையுடைவன்போற் காணப்பட்ட வனும்--உங்களால் அவ்வளவு வியந்து சொல்லப்பட்ட நல்லழகு வாய்ந்தவனும்-- நம்பிக்கையை வருவித்தற்கு கூரிய சொல்லுஞ் செயலுங் காட்டினவனும் ஆன அந்த இளைஞன், சிறிது நல்ல நிலைமை யிலுள்ள பௌத்த கனவான் போல் உடை அணிந் திருந்த அந்த இளைஞன் சுருங்கச் சொல்லுங்கால், பயங்கரமான நல்லானைத் தவிர வேறு பிறன் அல்லன்.” என்று குமுதவல்லி மொழிந்தாள்.

சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் தாம் அடைந்த ஆச்சரியத்தைப் பற்றி ஒருசொற்கூடப் பேச வலியற்றவர் களானார்கள்; ஏக்கத்தினாலும் திகிலினாலும் பேச்சு இழந்து இருந்தார்கள்.

66

ஆம், பல நாழிகைகளாக வழித்துணை கொண்டு நாம் பயணஞ் செய்துவந்த அவ்விளைஞனே நேற்றிரவு நம் அறையி னுள்ளே முகம் மறைத்து வந்து என் மோதிரத்தைக் கைப்பற்றிப் போனவன்!” என்று பின்னுந் தொடர்ந்து பேசினாள் குமுதவல்லி.

66

‘ஆ! தெய்வமே!" நேசப்பெருமாட்டி, இதனை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?” என்று சுந்தராம்பாள் இப்போது பேசும் உணர்ச்சி வந்து வினவினாள்.

அதற்குக் குமுதவல்லி தாம் இரண்டு பிச்சைக்காரர்களைச் சந்தித்ததையும், பௌத்த இளைஞன் தன் பணப்பையி லுள்ளிருந்தவற்றிற் சிலவற்றைத் தற்செயலாய்க் கீழ் விழுத்தி விட்ட செய்தியையும் தன் தோழிமார்க்கு நினைப்பூட்டினாள்.

66

அப்போது தான் நான் என் மோதிரத்தைக் கண்டு கொண்டேன் மாதர்காள், உடனே யான் அதிசயமுந் திகிலுங் கொண்டேன் என்பதை நீங்களே எளிதில் எண்ணிக் கொள்ள லாம். நான் மோதிரத்தைக் கீழ்க்கண்ணாற் பார்த்தது பற்றி நல்லான் ஐயங்கொள்ளாமல் இருக்கும்பொருட்டு என் முகத்தை விரைவில் அப்புறமாகத் திருப்பிக் கொண்டேன்; அவனது பிந்திய நடவடிக்கையினால்--அது முன்போலவே செவ்வையாய் இருந்தது--யான் அதனைப் பார்க்கவில்லை யென்று நம்பி அவன் தன்னுள் எண்ணி மகிழ்ந்து கொண்டான் என்பதைத் தீர

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/155&oldid=1581415" இலிருந்து மீள்விக்கப்பட்டது