உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

அதிகாரம் - 8 மலையநாட்டு விதவை

தன் தோழிப்பெண்கள் இருவரும் பின்னேவரக் குமுதவல்லி விரைந்து ஓடினாள்,--மூவரும் மிக்க விரைவோடு செல்லும்படி தங்குதிரைகளை முடுக்கினார்கள்; அந்தச்சந்தின் வழியே அவர்கள் வேகமாய்ச் சென்ற போது அருகே யாராவது இருந்து பார்த்தால், அப்பெருமாட்டியும் அவள் தோழிப் பெண்களும் குதிரையேற்றத்திற் காட்டிய திறமையை அவர் வியவாமல் இருக்க முடியாது. நாகநாட்டரசி தாம் படுமோசத்தில் அகப்பட்டுக் கொண்டதாக எண்ணிய இடத்தினின்றும் பறந்து வந்து, இன்ன வழியாய்த் தாம் போவதென்று சிறிதும் எண்ணாமல் அவர்கள் போயினார்கள்; மற்றொரு சந்துவழி வந்து குறுக்கிடும் ஓர் இடத்தண்டை வந்தபிறகு, தம்மைப் பின்றொடர்ந்து வருவார் உண்டானால் அவர்கள் தம்மை வந்து பிடித்துக் கொள்ளுவதற்கு இட ம் இல்லாதபடி குமுதவல்லி வேண்டுமென்றே மறைவான வழி ஒன்றில் திரும்பிப்போனாள். கடைசியாக, அன்று பகல் நல்லஊழியஞ் செய்த அக்குதிரைகளானவை தமக்குண்டான வருத்தத்தை இனிது புலப்படுத்திக் காட்டவே குமுதவல்லி தன் குதிரைக் கடிவாளத்தை இழுத்துப் பிடித்தாள்--அதைப் போலவே அவள் பாங்கிமாருஞ் செய்தார்கள். சில நிமிஷங்களில் குதிரையின் நடையானது இன்னுங் குறைந்து மெது நடை யாயிற்று; விரைந்தோடி வந்தமையால் முன்னே தெரிவிக்கக் கூடாத விவரங்களை குமுதவல்லி இப்போது சொல்லுவதற்கு ஒழிவு பெற்றாள், அவள் பாங்கிமாரோ அவற்றை எப்போது அவள் சொல்வாள் என்று ஆத்திரத்தோடு எதிர்பார்த்திருந் தார்கள்.

“பெண்காள், நான் இங்ஙனஞ் சடுதியில் வரலானதைப் பற்றி நீங்கள் திகைப்புந் திகிலும் அடைந்தீர்கள் என்பதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/154&oldid=1581414" இலிருந்து மீள்விக்கப்பட்டது