உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுதவல்லி நாகநாட்டரசி

131

யால், அப்போது தமக்கும் அம்மலையநாட்டுத் தலைநகருக்கும் இடையிலிருந்த தூரத்தைத் தாம் இப்போது பின்னும் மிகுதிப்படுத்திக் கொண்டார்கள் என்பது புலனா யிற்று. ஆனாலும் இப்போது அதற்காகச் செய்யக் கூடியது ஒன்றுமில்லை; மெய்யாகவே குமுதவல்லி தாம் செவ்வையாகத் தப்பிவந்ததை எண்ணுமிடத்து இதற்காக மனம் வருந்தலாகா தென்று உணர்ந்தாள்.

நாகநாட்டரசியானவள் அவ்வீட்டுக்காரியின் முகத்திலே காணப்பட்ட கவலை துயரங்களின் அடையாளத்தைக் கவனி யாமல் இருக்கவில்லை; தன் கணவனை இழந்த வருத்தத்தின் வேறான ஒரு துயரத்தோடு அவை இயைந்தனவாய் இருக்க வேண்டுமென்று அவள் எண்ணாமல் இருக்கக்கூட வில்லை;

னன்றால், கணவனை இழந்ததால் உண்டான துயர மானது இவ்வளவு காலத்திற்குப்பிறகு கனிந்து தேவவிசுவாச மாக அமைதி பெற்றிருக்குமென்று மனோபாவனை செய்தாள். அவளுக்கு இயற்கையாக உள்ள மேன்மைக் குணமானது அவள் அதனைப்பற்றி ஏதுங் கேளாமல் தடை செய்தது: ஆனாலும் அடிக்கடி அந்நல்லவளை இரக்கத்தோடும் பரிவோடும் மனத்திற் சிந்தித்தாள். இப்போது இம்மலையநாட்டு விதவையின் புதல்விகள் அவ்வீட்டினுள்ளே சிறந்த படுக்கையறையில் குமுதவல்லி, சுந்தராம்பாள், ஞானாம்பாள் மூவருக்கும் படுக் கைக்கு வேண்டிய வசதிகளை ஒழுங்குபடுத்தும் பொருட்டுக் கூடத் தறையினின்றும் போனவுடனே இந்த நல்ல கைம் பெண்ணா னவள் தானே தன் துயரமான தோற்றத்தைப் பற்றி விவரித்துக் சொல்லப்புகுந்தாள்.

-

இப்போது நம்மை வீட்டுப்போன அருமையான அவ் விரண்டு பெண்கள் மாத்திரமே எனக்குக் கடவுள் அருள் பண்ணின பிள்ளைகள் அல்லர். இரண்டு ஆண்டுகளாக எங்களுடன் இல்லாமலிருக்கிற மற்றொரு பெண்ணும் உண்டு. என்று சொல்லும்போதே அக்கைம்பெண் அழுதாள்.

“அப்பெண் உண்மையில் இறந்துபோயிற்றோ?” என்று குமுதவல்லி இரக்கம் நிரம்பிய மெதுவானகுரலிற் சொன்னாள்: துபோல் இரக்கமானது இசையின் இனிமை கலந்த மெது வான குரலிற் சொல்லப்படுதல் என்றும் அரிது அரிது.

66

ல்லை, அம்மா, அறிவும் அழகும் மிகுந்த என் மரகதத் தைக் கொண்டு போனது மரணம் அன்று. அஃது ஒரு துயரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/160&oldid=1581421" இலிருந்து மீள்விக்கப்பட்டது