உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மறைமலையம் 13

கதை: என்றாலும் அதனை உங்களுக்குச் சொல்லு கிறேன். மரகதம் என் பெண்மக்கள் மூவரில் மூத்தவள்; அவள் வயது இன்னும் அவள் உயிரோடு இருந்தால் - இப்போது இருபத் தான்று ஆகும். ஒருவரைப் புகழ்ந்துபேசுவது எனக்கு இயற்கை அன்று: ஆனாலும், உண்மையைச்சொல்லுவது எனக்கு அவசியமாய் இருக்கிறது; இந்தச்சாய்ங்காலம் உங்களை என் கண்கள் காணும் வரையில் இதற்குமுன் என்மரகதத்தைப் போல் அவ்வளவு அழகான ஒரு பெண்ணை நான் பார்க்கவே யில்லை. ஆம்-அவள் அழகாயிருந்தது போலவே கற்பொழுக்கம் உள்ளவளுமாய் இருந்தாள் பிரியமுள்ள மகள் - அவளை அறிந்தவர்கள் எல்லாராலும் அவள் நேசிக்கப்பட்டாள். அப்படிப்பட்ட களஞ்சியம் போல்வாளைக் கைப்பற்றுதற்கு எல்லாவகையாலும் தகுதியுள்ளவனான இந்நாட்டிற் பணக்கார இளங்குடியனாவன் ஒருவனுக்கு அவளை மணம் பொருத்து வதாக உறுதி செய்திருந்தது. அம்மா! பாருங்கள், என் கணவனை இழந்த பிறகுங் கூட நான் ஆறுதல் அடைவதற்குப் பலவழிகள் ருந்தன. எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்ல காலம் என்னும்படி பல குறிகளுங் காணப்பட்டன." என்று அம்மலைய விதவை விடை கூறினாள்.

இதனை மிகவுங்கவனமாய்க் கேட்டுவந்த குமுதவல்லி “உங்கள் சொற்களால் எனக்கு முன்னமே தெரிந்தபடி, இவைகள் பிறகு எங்ஙனம் அவ்வளவு முழுதுங்கெட்டுப் போயிருக்கக் கூடும்!” என்று வினவினாள்.

66

அம்மா, அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று தன் கன்னத்தில் ஒழுகின கண்ணீரைத் துடைத்துக்கொண்டே அம்மலைய விதவை மறுமொழி தந்தாள். “அம்மா, ஒருகால் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், ஆண்டுதோறும் முகமதியர் இரமசான் என்று சொல்லப்படும் சிறந்த ஒரு நோன்பை ஒரு மாதகாலம்வரையில் நோற்றுவருகிறார்களே" என்று தொடர்ந்து உரைத்தாள்.

“நான் அதனைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.' என்று குமுதவல்லி கூறினாள்.

-

“நல்லது, அம்மா, அந்த இரமசான் நோன்பு நோற்கிற போது அல்லது அதன் முடிவில் உள்ள ஒரு வழக்கத்தைப் பற்றி நீங்கள் ஒருவேளை தெரியாதிருக்கலாம். அதாவது: எங்கேயாவது அகப்பட்ட அழகில் மிகச்சிறந்த ஒரு கன்னிப்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/161&oldid=1581423" இலிருந்து மீள்விக்கப்பட்டது