உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

133

பெண்ணைத் துருக்கிசுல்தானுக்குக் காணிக்கையாகக் கொண்டு போய் விடுவதே. அதற்காக அடிமை விற்பவர்கள் இரமசானுக் குச் சில மாதங்கள் முன்னாகவே அழகிய பெண்களைச் சாவ தானமாய்த் தேடித்திரிவார்கள். சுல்தானது அந்தப் புரத்திற்குத் தெரிந்தெடுக்கப்படும்படி மற்றவர்களைப் போட்டி யில் பின்னிடச்செய்யும். அத்தனை அழகுள்ள ஒரு கன்னியைத் தாம்பெறும் நல்லதிர்ஷ்டம் உடையவர்கள் ஆகலாம் என்பது அவர்களுடைய ஆவல்.” என்றாள் அக் கைம்பெண்.

66

இஃது எனக்கு நன்றாய் தெரியும். மேற்கணவாய் மலைநாடுகளில் உள்ள அழகிய இளங்கன்னிப்பெண்கள் பலர் துருக்கி தேசத்துப்பெருஞ்செல்வப் பிரபுக்களின் அந்தப் புரத்துக்குட் செல்ல விழைந்து தாமாகவே அடிமை விற்கிறவர்களின் பின்னே காந்தாந்திநோபிள் என்னும் நகரத்திற்குப் போவதைத் துயரமுடன் ஒப்புக்கொள்ள வேண்டியதே. இன்னுங் கொச்சி, குடகு, மலையநாடு, நாகநாடு முதலிய வற்றிலுள்ள தாய் தந்தை மாரும் தம் புதல்விகளுக்கு உயர்ந்த பதவி தேடிக்கொடுக்கும் விழைவால் அடிமை விற்பவர்களிடம் தாமே தஞ்சொந்தப் புதல்வியரைக் கொடுத்துவிடுவது பின்னும் மிக்க வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. என்று குமுதவல்லி

மொழிந்தாள்.

66

‘அவை எல்லாம் அவ்வளவும் உண்மை, அம்மா! இன்னும் என்ன, அடிமை விற்கும் அவர்கள் அடிக்கடி மனிதரைக் கொள்ளை கொண்டு போகுங் கொடியர்கள். அவர்கள் நடவடிக் கைகளால் பறிகொடுத்த குடும்பத்தில் துயரமும் கேடும் உண்டா ா கின்றன. என் தலைவிதியும் இதுவே, அம்மா.” என்று அம்மலைய விதவை மறுமொழி கூறினாள்.

இப்போது அவ்வேழைக் கைம்பெண்ணின் மனத் துயரத் தின் காரணம் இதுவென்று அறிவாளாய்க் குமுதவல்லி. "ஓ, இது கூடுமானதா! உங்கள் அழகிய மரகதம் அங்ஙனம் கொண்டு போகப்பட்டனளா?” என்று கூவினாள்.

66

66

“அஃது அப்படித்தான், அம்மா." என்று மறுமொழி சொல்கையிலேயே தேம்பிதேம்பி அழுதாள். இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஒருநாள் அடிமை விற்பவன் ஒருவன், ஏராளமான குதிரைச்சாரியுடன் வந்து, உணவு எடுப்பதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/162&oldid=1581424" இலிருந்து மீள்விக்கப்பட்டது