உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் 13

இந்த மனையகத்தில் தங்கினான். அவன் தன்னிடத்தே ஏறக் குறைய ஆறு அழகிய இளம் பெண்கள் வைத்திருந்தான். அவர்கள் எல்லாரும் காந்தாந்திநோபிள் நகரத்திற்குப் போவதைப்பற்றி மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தனர்.

ன்னும் அவன் பார்வைக்குக் கொடுந்தோற்றம் உடையராய்ப் படைக்கலம் பூண்ட ஆறுபேர்களைக் கூட வைத்திருந்தான்.என் மரகதத்தின்மேல் அந்தப்பாவி கண்கள் பட்டநாள் பொல்லாத நாள்! இப் பெண் தன் பேரழகின் பொலிவால் துருக்கி சுல்தானுக்குப் பிரியமானவளாய் அவ்வரச நகரத்திலே தெரிந் தெடுக்கப்பட்டு வரப் போகின்ற இரமசான் பண்டிகை முடிவிலே அவருக்குக் காணிக்கையாக விடப்படுவதற்கு இடம் இருக்கிற தென உறுதிமொழி சொல்லி, - ஆகவே அவளைத் தன்னோடு சேர்த்து விடுவதற்கு நான் உடன்பட வேண்டுமென்று முதன் முதல் எனக்கு எடுத்துச் சொல்லத்துணிந்தான். ஆனால் நான் அவன் சொல்லிய ஏற்பாட்டை இகழ்ந்து கோபத்தோடுந் திகிலோடும் மறுதலித்துவிட்டேன். அம்மா, அப்போதுதான் அவன் கைக்கூலியாலும் வேண்டுதலாலும் தான் பெற்றுக் கொள்ளக் கூடாததைப் பலவந்தமாய் அடையலானான். என் கூலியாட்கள் தூரத்தே வயலிலே இருந்தார்கள்: நானோ இங்கே என் மூன்று புதல்விமாரோடும் காவலற்று இருந்தேன். அந்தப்பாவி என்னையும் என் இளைய புதல்விகள் இருவரையும் ய காலுங் கையுங் கட்டிவிடும்படி தன் ஆட்களுக்குக் கட்டளை யிட்டான்--நாங்கள் எவ்வளவோ தடுத்தும் கெஞ்சியும் அழுதும் அவர்கள் அப்படியே செய்து விட்டார்கள். பிறகு மரகதம் அலங்கோலமாய்த் துன்பத்தால் மெய்மறந்து போக அவளைக் காண்டுபோய் விட்டனர்! என்னையும் மிஞ்சின என் இரண்டு பெண்களையுங் கட்டவிழ்த்துவிடயாரும் இந்த மனையகத்திற்கு வரும்முன்னே அந்தக் குதிரைச்சாரி மிகநெடுந் தூரம் போயிருக்க வேண்டும்.”

குமுதவல்லி அப்பெண்பிள்ளையின் கையைப் பிடித்து அதனை உண்மையான இரக்கத்துடன் அழுத்திக் கொண்டு, "ஓ! இவையெல்லாம் கோரமாயிருக்கின்றன! இவ்வாறு உங்கள் மரகதத்தை இழந்து போனீர்களோ?” என்று சொன்னாள்.

அதற்கு வருத்தம் மிக்க அவ்விதவை, “எப்போதுமே இழந்து போனேன். தானும் நாங்களும் உள்ளான இப்பொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/163&oldid=1581425" இலிருந்து மீள்விக்கப்பட்டது