உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

135

லாத கொள்ளையை அவளுக்கு மணமகனாக நிச்சயிக்கப்பட்ட வன் தெரிந்தவுடனே அவன் மனத்தை வருத்திய துன்பத்தை, ஓ! அம்மா நீங்களே எண்ணிப் பாருங்கள். என் மரகதத்தினிடத்திலே அவனுக்கு இருந்த உண்மையான பற்றுதலுக்கு ஓர் அடையாளம் உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்தக் குதிரைச்சாரியைப் பின்றொடர்தற்காக அவன் ஆயுதம் பூண்ட தோழர் கூட்டத் தோடு புறப்பட்டான்: ஆனால் அதைப்பற்றி அவன் ஒரு செய்தியும் பெறக்கூடவில்லை--அவன் காந்தாந்திநோபிள் நகரத்திற்குப் பயணம் புறப்பட்டுப் போனான். ஆனால் பலவகைப்பட்ட இடுக்கண்களும் அபாய சம்பவங்களும் அவனை வழியிலே தடங்கல் பண்ணின; ஆகையால் அவ்வரச நகரத்திற்கு மிகவும் காலம் தாழ்த்துப் போனான். இரமசான் பண்டிகை முடிவு பெற்றது--வழக்கப்படி திருவிழாக்களும், களியாட்டுகளும், வாண வேடிக்கைகளும்., சிறந்த ஊர்கோலங்களும் அதனைப்

பின்றொடர்ந்து நடந்தன. கடைசி யாக நரபலியும் நடந்தேறியது; முந்நூறு அழகிய பெண்கள் நடுவிலே என்னுடைய மரகதம் சுல்தானுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நிகரற்ற அழகிய மணியாய்ப் பொறுக்கி எடுக்கப்பட்டாள். அவ்வேழை இளம் பையன் நெஞ்சம் உடைந்த வனாய்க் காந்தாந்திநோபிளை விட்டு வந்தான்; உரிய காலத்தே தன் வீடு வந்து சேர்ந்தான்--ஆனால், ஐயோ முன்னிருந்ததற்கு அவன் வடிவம் எவ்வளவு வேறுபட்டுப் போனான். அம்மா, நான் அவனை அடிக்கடி பார்க்கிறேன்: அனால் அவன் திரும்பி வந்தது முதல் அவன் வாயில் ஒரு வ புன்சிரிப்பாயினும் வர நான் பார்க்கவில்லை. தானே இயங்கும் ஆற்றல் வாய்ந்த மெய்யான உயிர் ஒன்றும் இல்லாத ஓர் இயந்திர சூத்திரத்தால் நடைபெறும் இயந்திரம் போல அவன் தன் அலுவல்மேற் போகிறான். என்மகள் சுல்தான் மனைவி யாகியிருக்கலாம் என்பதில் தட்டில்லை; ஆனால், ஐயோ! இந்நேரம் அவள் மனம் முறிந்து போகா விட்டாலுங் கூட, வெளிமினுக்கான துயரநிலைமை யிலே தான் அவள் இருக்கின் றாள் என்று எனக்குத் துணிவாய்த் தோன்றுகின்றது." என்று கூறினாள்.

66

வி

அவளிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தியும் வர வில்லையா?” என்று குமுதவல்லி வினாவினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/164&oldid=1581428" இலிருந்து மீள்விக்கப்பட்டது