உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

66

மறைமலையம் – 13

ஐயோ, இல்லையே!" என்று அக் கைம்பெண் விடை பகர்ந்தாள். “ஒரு தரம் ஒரு பெண்பிள்ளை காந்தாந்தி நோபிளி லுள்ள அரசன் அந்தப்புரத்திற்குள் நுழைந்து விட்டால், அவளுக்கும் வெளியேயுள்ள உலகத்திற்கும் நடுவிலே நடக்க முடியாத பெருந் தடை உண்டாய் விடுகின்றது. அவள் யார்க்கும் செய்தி அனுப்பவுங் கூடாது மற்றவர்களிடமிருந்து ஒரு செய்தியும் பெற்றுக்கொள்ளவுங்கூடாது. வேறிடங்களில் தான் விட்டுவந்த பெற்றோர், உறவினர், நண்பர்கள் முதலான எல்லாரையும் அவள் ஒழித்துவிடவேண்டும், ஆணையோடு மறுத்துவிட வேண்டும். அவள் சைவசமயியாயிருந்தால் தான் கைக்கொண்ட சமயத்தையுங்கூட விட்டுவிடுதல் வேண்டும். சுருக்கமாய்ச்சொன்னால், அம்மா, அவள் இன்னாரென்பதே தாலைந்து போய் விட்டது; அவளிடத்திற் பற்றுதல் வைத்த வர்கள் அவளைப் பற்றி இனி ஒன்றுங் கேளாமலே போகலாம். என் மரகத்தின் தலைவிதியும் அப்படியே யாயிற்று அம்மா, இப்போது, என்முகத்தின்மேல் அடையாளங்களாக அவ்வளவு ஆழ்ந்தகோடுகள் அவ்வருத்தத்தினால் எவ்வாறு உண்டாயின என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள்.”

குமுதவல்லியும் அவள் பாங்கிமார் இருவரும் அம்மலைய நாட்டுவிதவை சொல்லிய கதையிலே துயரமும் இரக்கமும் மிகுந்த ஓர் பற்றுதல் கொள்ளப்பெற்றார்கள். அவளை ஆற்று வித்தற்கு அவர்கள் ஒரு சொல்லாயினும் பேச முயல வில்லை. ஏனெனில் அங்கே ஆறுதலுக்கு இடம் ஒன்றும் இல்லை. திரும்ப நன்மையுண்டாமென்று அவர்கள் ஓர் எழுத்தாயினும் சொல்ல வில்லை: என்னை யென்றால், ஆசையே அவிந்து போயிற் றென்றும் அவ் வாபத்தை இனித் திருப்ப முடியா தென்றும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

66

இலட்சக்கணக்கான குடிமக்களுக்கு எல்லாம்வல்ல அரசனாயிருக்கும் வல்லமையுள்ள சுலுத்தான் அவர்கள் தாம் இன்பம் நுகர்தற்பொருட்டுத், தாழ்ந்தோராயினும் தம்மோ L டாத்த மக்கள் சிலர்மேல் எவ்வளவு பெருந்துயரத்தைச் சுமத்திவிடுகின்றார் என்பதைத் தாம் சிறிதும் நினைக்கின்றார் இல்லையே! இன்னும், அம்மா, அவ்விளவரசன் இன்பத்திற்காக மற்ற நாடுகளில் உள்ள குடும்பங்கள் - என் குடும்பம் ஆக்கப் பட்டது போல்! பாழாக்கப்படுவது பின்னுந் துயர காரியமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/165&oldid=1581429" இலிருந்து மீள்விக்கப்பட்டது