உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

137

ருக்கின்றதே! இப்படியிருந்தும், அவர் அமைதியும் இரக்கமும் உள்ள நல்லமன்னன். என்றும் - அவர் பூத தயையும் அன்பும் நிறைந்தவரென்றும் - தான் அவற்றை நீக்கிவிடப் பிரியமுள்ள வராய் இருந்தும் தன் குடிமக்களின் விசுவாசத் திற்குப் பின்ன மாகும் என்று அஞ்சி ஆசார வழக்கங்கள் பலவற்றிற்கு இடந் தந்திருக்கிறார் என்றும் பேசிக் கொள்ளுகிறார்கள்." என்று அவ்விதவை தொடர்ந்து கூறினாள்.

ஓ! அவ்வாறாயின் அவர் வல்லமையால் யாது பயன்? எவ்வளவு நன்மைசெய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தில ராயின் தான்செலுத்தும் அத்தனைவல்லமையும் என்ன பயனுக்கு? என்று குமுதவல்லி அவ்விதவைக்கு நேர்ந்த இடுக்கணை நினைத்து அருவருப்பு மிக்க குரலிற் பேசினாள்.

66

“அம்மா,பேசாதேயுங்கள்!” என்று அவ்விதவை மறு படியுந் தன்கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “என் புதல்விகள் திரும்பி வருகிறார்கள், காணாமற்போன அவர்கள் அக்காளைப் பற்றி நான் அவர்களிடம் பேசுவதே இல்லை.” என்று உரைத்தாள்.

அப்பெண்கள் அங்ஙனமே வந்தார்கள்; குமுதவல்லிக்கும் அவள் பாங்கிமார்க்குஞ் சித்தம் பண்ணப்பட்ட அறைக்கு அவர்களை இப்போது அழைத்துச் சென்றார்கள். அங்கே நாகநாட்டரசியானவள் சிறிது முன்னே தாம் கேட்ட துயரமான வரலாற்றைப்பற்றித் தமக்கு உறக்கம் வந்து கூடும்வரையில் தன் பாங்கிமாரோடு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

காலையில் அவர்கள் அறையைவிட்டு வந்தபோது, அவ் விதவையும் அவள் மகளிர் இருவரும் தாம் செய்தற்குரிய உதவி களைக் கூடுமானவரையில் ஏற்கும் வகையாகச் வகையாகச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்: பல திறப்பட்ட உணவு களு.ம், காணியில் விளைந்தனவும், கனிகளூம், குளிரப் பண்ணும் பானங்களும் சாப்பாட்டுக்காகப் பலகைமேற் கொண்டுவந்து பரப்பப்பட்டன. குமுதவல்லி, அவ்விதவையி னிடத்துக் கூலிக் காரரா யிருப்போரிற் சிலரை ஆயுதந்தரித்த வழித்துணையாக் கூட்டியனுப்பும்படி கேட்க எண்ணினாள்; ஆனால், அக்கைம் பெண் தற்செயலாய்ப் பேசியதொன்றி லிருந்து அவர்கள் எல்லாரும் தமது விடுமுறை நாளைக் களியாட்டிற் கழிக்கத் தொலைவிலுள்ள ஓரிடத்திற்குப் போயிருக்கின்றார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/166&oldid=1581432" இலிருந்து மீள்விக்கப்பட்டது