உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி *

141

அப்போது கேசரிவீரன் பேசாதிருந்தாலும் தன்பார்வையில் தானுற்ற வியப்பைப் புலப்படுத்தினான்.

66

66

"ஆம் ஓடித்தான் போனார்கள்.” என்று திரும்பவும் பஞ்சாலைக்காரன் மறுமொழி கூறினான்: அங்ஙனம் செய்தற்குத் தக்க காரணம் இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை.'

66

அப்பௌத்த இளைஞன் மிகவும் கலவரம் அடைந்த வனாய் ஓ புத்தரே! சாரணர்களே! என்று ஓலமிட்டான்; 'உம்முடைய வெடுவெடுப்பான குணமும் அன்பற்ற செய்கை யுமே அந்நங்கையும் அவள் பாங்கிமாரும் அவ்வுதவியை வேறிடத் திற்றேடிப் பெறும்படி அவர்களைத் துரத்திவிட்டன; ஐயமின்றி நீர்தாம் அவ்வுதவிக்கு விலை ஏற்படுத்தி வியாபாரம் பண்ணி னீரே!”

"உமது விருப்பப்படி புத்தரையாவது அவர் சாரணரை யாவது ஆணையிட்டுக் கூப்பிட்டுக்கொள்ளும்; நானோ சைவசமயத்திற்குரிய அடியார்கள் எல்லாரும் அறிய ஆணை யிட்டு நீர் பொய் பேசுகிறீர் என்று சொல்லுகின்றேன்! அந்தப் பெண்ணையும் அவள் பாங்கிமாரையும் நான் என் வீட்டுக்கு எவ்வளவோ உபசாரத்தோடு அழைத்துப்போனேன்; போய் வீட்டுக்கதவைத் திறக்கயான் திரும்பவே, அவர்கள் வில்லினின்று அம்புகள் புறப்பட்டாற்போல விரைந்து ஓடிப் போனார்கள். ‘பறந்து ஓடுங்கள் உங்கள் உயிர் தப்ப!' என்னுஞ் சொற்கள் அப்பெண்ணின் வாயினின்றும் ஒலித்தன! அவர்கள் யேபோனார்கள் - குளம்பின் ஓசையாலல்லாமல் அவர்களு டைய குதிரைகள் தமது அடிநிலத்தே, பாவாதன போல் தோன்ற அத்தனை வேகமாய்ச் சென்றன.” என்று பஞ்சாலைக்காரன் திரும்பவும் பேசினான்.

ஓடி

அம்மனிதன் வெடுவெடுப் புள்ளவனாய் இருந்தாலும், அவனது உயர்ந்த பெருந் தன்மையைப் பார்க்குமிடத்து அவன் க்கதையைச்சொல்லிய மாதிரியில் ஏதோ பிசகாத உண்மை ஒன்று உண்டென்பது புலப்பட்டது. அது வல்லாமலும் வெகுமானம் கிடைக்குமென்று உறுதிமொழி சொன்னவுடனே அவன் தான் உதவி செய்வதிற் போதுமான பெருமகிழ்ச்சி காட்டினதை நீலலோசனன் நினைவு கூர்ந்தான்; இப்பொழுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/170&oldid=1581440" இலிருந்து மீள்விக்கப்பட்டது