உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம்

13

குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் ஓடிப்போனமையால் அவன் தான் எதிர்பார்த்ததை இழந்துபோனான். ஆகவே, அப்பௌத்த இளைஞன் அவன் சொல்லிய கதையில் அவ நம்பிக்கை கொள்ளக்கூடவில்லை. - அல்லது அக்கதை வேறு படுத்தியாவது, பிசகாகவாவது சொல்லப்பட்டதென்றும் அவன் எண்ணக்கூடவில்லை. அவன் பஞ்சாலைக்காரனிடம் கடுமை யாகப் பேசிய தனது நடையை மாற்றி, அவனை அழைத்து மேசையின் அருகே இருத்தி நடந்தவற்றைப்பற்றி நுணுக்கமாய்க் கேட்டான்; அப்பஞ்சாலைத் தலைவன். இக்கதையைத் திரும்பவும் அப்படியே மொழிந்தான்; அவன் பின்னுஞ் சேர்த்துக்கூறவேண்டுவ தொன்றும் இல்லை. குமுதவல்லியும் அவள் தோழிமாரும் போய்விட்டார்கள் என்பது தெளிவாகப் பெறப்பட்டது; அவர்கள் அடைந்த பேர் அச்சத்திற்குகாரணம் யாதென்று அவர்கள் ஒருங்கு கூடி ஆழச் சிந்தித்தும் சிறிதேனும் ஊகிக்க வலியற்றவர்களானார்கள்.

மறுநாட் காலையில் அவ்வழகிய நங்கையோடு கூடி மறுபடியும் பயணம் துவங்கக் குறித்த நீலலோசனன் எண்ணம் பாழ்பட்டது; தனது ஆன்ம இன்பத்திற்கு இன்றியமையாத தான ஏதோ ஒன்றைத் தான் இழந்துவிட்டது போலவும் - இதற்குமுன் எங்குந் துலக்கமாய் நகைகொண்டு விளங்கிய ஒரு தோற்றத்தின் மேல் கரிய மேகமானது தனது நிழலை வீசி மறைத்தது எனவும் அவன் எண்ணினான்; அன்றிரவு அப்பௌத்த இளைஞன் துயர் மிகுந்த உள்ளத்தோடு படுக்கைக்குச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/171&oldid=1581442" இலிருந்து மீள்விக்கப்பட்டது