உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

அதிகாரம் - 9

கொள்ளைக்காரன் மனைவி

ப்போது நாம் நல்லானிடம் திரும்புதல் வேண்டும். ஏனெனில், அப்போது நேர்ந்த அச்செயலின் வயணங்களால் நாகநாட்டரசி அவ்வளவு வருந்துதற் கிடமான பிழையெண்ணங் கொள்ளப்பெற்றது இயற்கையே என்றாலும், இதனைப் படிப் போர் உயர்ந்த ஒழுக்கமும் நற்குணமும் வாய்ந்த நீலலோசனனை அக்கொடிய கொள்ளைக்காரனோடு ஒன்று படுத்திய குமுதவல்லியின் பிழையில், சிறிதும் ஒருப்படமாட்டார்களாத லால் என்க.

குமுதவல்லியினின்று அவள் மோதிரத்தைக் கவர்ந்து கொண்டமையால் தன்கருத்து இனிது நிறைவேறியபின் எவ்வாறு நல்லான் சத்திரத்தைவிட்டுச் சடுதியிற்போனான் என்பதைச் சத்திரக்காரன் வாய்மொழியால் நாம் அறிந்து கொண்டோம். இருளனையும் மாதவனையும் தான்விட்டு வந்ததும், நீலலோசனனையும் அவன் துணைவரையும் தவறாமல் சிறைப்படுத்தும் பொருட்டு கோபுரத்திற்குத் தான் விடுத்த தன் கூட்டத்தார் கையில் அவர்கள் சிறைப்பட்ட செய்தியைத் தெரிந்து கொள்ளுதற்கு இப்போது அவன் எதிர்பார்த்ததும், சிலமைல் தூரமுள்ளதும் ஆன ஓர் இடத்திற்கு அவன் விரைந்து குதிரை ஊர்ந்து திரும்பிவந்தான். மாதவன் உடையிற் கொண்ட கோலத்தோடு சிறிது நேரம் இல்லாதிருந்தது, பிறகு தான் இப்போது திரும்பிவரும் இவ்விடத்தில் பௌத்தரைச் சிறை கொண்டு தன் கூட்டத்தார் வந்திருப்பர் என்றும் அவன் எதிர்பார்த்தான்.

இந்த நிமிஷத்தில் கூடாரத்தின் திரையானது அப்புறம் இழுக்கப்பட்டது; மீனாம்பாள் வெளியே வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/172&oldid=1581443" இலிருந்து மீள்விக்கப்பட்டது