உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் -13

“என் மேன்மை மிக்க கணவனே!" என்று கூறிக்கொண்டு நல்லானுடைய மார்பில் மேற் போய்விழுந்தாள்..

“என் அழகிய மீனாம்பாள்! காதலின்மிக்க என் மனைவி” என்று அத்தலைவன் கூவித் தான் காதலிக்கும் அவ்வழகில் சிறந்த மங்கையைத் தன்மார்புற அணைத்துக்கொண்டான். இவ்விரு வரும் பலவாரங்களாகப் பிரிந்திருந்தமையால் இப்போது கூடிய இச்சந்திப்பில் உண்டான பெருங்களிப்பின் கண் ஆழ்ந்தவனாய் அவன் சில நிமிஷநேரம் தன் தந்திரங் களையும் சூழ்ச்சிகளையும் மறந்திருந்தான்.

முதலிற் கிளைத்த அவ்வுணர்வின் கொந்தளிப்புத் தணிந்த வுடனே மீனாம்பாள், “இருளன் மேற் குற்றஞ் சொல்லாதீர்.நான் என்னாற் கூடியமட்டும் செய்ததுபோலவே, அவனும் தன்னாற் கூடிய அளவும் செய்தான்; ஆயினும், அவ்விளம் பௌத்தனின் துணைவர்கள் ஏதோ சமுசயப்பட்டார்கள் - அதனால் எல்லாம் பிசகிப்போயின" என்று மொழிந்தாள்.

நல்லான் தன் தோளின் மேற் சாய்ந்து கொண்டிருக்கும் அழகிற் சிறந்த தன் மனையாளோடும் கூடாரத்துக்குப் போயி னான்; அவர்கள் இரட்டுத்துணி மேல்மறைப்பின் கீழ் உட்கார்ந் தார்கள். காப்பிரிப்பெண்ணும் மலைநாட்டுப் பணிப்பெண்ணும் சிறிதுதூரத்தில் ஊன்றப்பட்டிருந்த வேறொரு கூடாரத்தில் இருந்தார்கள். அதனால் நல்லானும் மீனாம்பாளும் ஒருங்கு தனியே யிருக்க இடம் பெற்றனர்.

"இப்போது நடந்தவற்றையெல்லாஞ் சொல் மீனாம்பாள்.” என்றான் கள்வர் தலைவன்.

என்

அங்ஙனமே அவள் நீலலோசனனிடத்தும் அவன் துணைவர்களிடத்தும் தான் செய்த துணிகரச் செயல்களை விரித்துரைப்பாளானாள்; அங்ஙனம் சொல்லுமிடத்துத் தான் அவ்விளம் பௌத்தனிடத்து அளவுக்கு மிஞ்சிக் காட்டிய காதலினிமைகள் அவ்வளவும் மெதுவாகச் சொல்லாது விட்டு நெகிழ்ந்து போயினாள். பிறகு அவள்தான் வியாக்கிரவீரன் கையால் அடைந்த கிருத்திரமங்களைச் சொல்லவந்தபோது அவன் தன்னைக் காலுங்கையுஞ் சேர்த்துக்கட்டிச் சாய்வணை யோடு எங்ஙனம் பிணித்து முடிந்தான் என்பதை எடுத்துக் கூறினாள்; - இதனைக் கேட்டதும் நல்லான் “ஒரு பௌத்தனு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/173&oldid=1581446" இலிருந்து மீள்விக்கப்பட்டது