உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

145

டைய நாய்” என்று தான் பெயரிட்ட நீலலோசனன் இளைய துணைவன் மேல் பயமுறுத்துங் கொடுஞ் சொற்களையும் பழிவாங்கும் ஆணைமொழிகளையும் எடுத்துரைத்தான். நல்லான் விரைந்தனுப்பின ஆட்கள் கோபுரத்திற்கு வந்த பிறகு அல்லாமல் தான் கட்டவிழ்த்து விடப்படவில்லை என்று மீனாம்பாள் கூறுவாள் ஆனாள். ஏனெனில், பின்னே தெரிந்த படி,வீட்டுக்குரியவனும் அவ்வாறே காலுங்கையுங் கட்டப்பட்டுக் கிடந்தான்; குதிரைக்காரனும் இலாயத்தில் உள்ள தன்அறையில் கட்டப்பட்டு இருந்தான் அந்தப் பௌத்தர்கள் புறப்பட்டுப் போம்பொழுது கோபுரத்தின் பெரிய வாசற்கதவு அவர்களால் திறந்து விடப்பட்டிருந்தது. நீலலோசனனையும் அவன் துணைவரையும் பிடிக்க வேண்டுவது மிகவும் அவசிய மாகுமென்று கருதி அவர்களை நாடெங்குங் தேடிப்பார்க்கும் பொருட்டு அக்கொள்ளைக் கூட்டத்தாரால் தான் அனுப்பி யிருப்பதாகவும், தாங்கள் தேடிப்போகும் பொருள் அகப் பட்டால் அல்லாமல் அன்றி அவர்களைக் கண்டுபிடிக்கும் எண்ணம் முழுதும் பாழ்பட்டாலல்லாமல், அவர்கள் திரும்பித் தங்கள் தலைவனிடம் வரலாகாது எனவும் தான் அறிவுறுத்தி யிருப்பதாக மீனாம்பாள் பின்னும் மொழிந்தாள். குதிரைமேற் சென்ற அம்மனிதர்கள் நெடுநேரமாக வராததற்குக் காரணம் இதுதான். அம்மனிதர்கள் தன்னை விடுதலை செய்ய வரும் வரையில் தான் இரண்டரை நாழிகைக்குமேல் சாய்வணை யோடு சேர்த்துக் காலுங்கையும் இறுகக் கட்டப்பட்டிருந்தமை யால், தான் மிகவும் களைத்து நோயாய்ப்போகவே, திரும்பவும் தன் கணவனிடம் வந்து சேரப் பயணம்புறப்படும்முன், அந் நாளின் பிற்பகலில் தான் நெடுநேரம் தாமதித்திருக்கலாயிற் றெனவும் மீனாம்பாள் கூறிமுடித்தாள்.

அந்தப் பெளத்தர்களுக்கு மாறாய் எடுத்த துணிகரச் செய்கை தவறியதைப்பற்றி நல்லான் மிகவும் மனம் அலைக் கழிந்தான்; என்றாலும், தன் ஆட்கள் அவர்களைத் தொடர்ந்து பற்றிக்கொள்வார்கள் என்னும் ஒரு சிறு நம்பிக்கை இன்னும்

அவன் கொண்டிருந்தான்.

இவ்விடத்திற்கு வந்ததும் நல்லான் அங்குள்ள தோப்பிற் குள் நுழைந்தான்; அவன் அங்குநின்று போனதும் அங்கே இயற்றப்பட்ட கூடாரத்தின் உள்ளேயிருந்து ஒருவிளக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/174&oldid=1581447" இலிருந்து மீள்விக்கப்பட்டது