உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 13

ஒளிர்வதைக் கண்டான். உடனே,புல்லின்மேற் படுத்துக் கொண் டிருந்த இருளனும் மாதவனும் விரைந்தெழுந்து இவனிடம் வந்து சேர்ந்தார்கள்; கள்வர் தலைவன் ஆத்திரத்தோடும் “என்ன செய்தி?” என்று கேட்டான்.

என்று

அதற்கு இருளன் துயரத்தோடும், “பொல்லாத செய்தி சால்ல வேண்டியிருப்பதாக விசனிக்கின்றேன். விடைபகர்ந்தான்.

"கேடுகாலமே!” என்று சினம் நிறைந்த குரலோடு, “நான் கொண்ட பொல்லாத சந்தேகப்படியே ஆயிற்று! நல்லது ஈது என்ன செய்தி? நம்முடைய ஆட்கள் எங்கே? அவர்கள் திரும்பி வந்தார்களா? மீனாம்பாள் எப்படியானாள்?" என நல்லான் உரத்துக் கூவினான்.

"மீனாம்பாள் பெருமாட்டி பத்திரமாகவே இருக்கிறார் கள்.” என்று இருளன் ஏதோ சொல்லுவதற்கு நல்லசெய்தி வாய்த்தது பற்றி மகிழ்ந்து விடை கூறினான். “அவ்வம்மை அதோ அந்தக் கூடாரத்தில் இருக்கிறார்கள். பெளத்தர்களைப் பற்றியோ வென்றால் - அவர்கள் மறுபடியும் நம்மைத் தப்பிப் போய் விட்டார்கள்.”

66

என்று

மறுபடியும் தப்பியா போய்விட்டார்கள்?” நல்லான் இரைந்தான். “முனிவர்கள் எல்லோரும் அறிய, நாம் எடுத்த காரியங்களில் நாம் உணர்வுகெட்ட முழு மூடர்களாய் விட்டோம் என்று தெரிகிறது! குறைந்தமட்டில் நான் மாத்திரம் இல்லை - ஏ ஏனென்றால் நான் ஒருவனே காரியசித்தி அடைந்து வருகின்றேன்!”

66

ஆ! சிறந்ததலைவனே தாங்கள் காரியசித்தி பெற்று வந்தீர்களா?" என்றான் இருளன். "ஏதோ அவ்வளவேனும் நல்லதுதான்.

66

66

ஆம் - ஏதோ நல்லது தான்,” என்று நல்லான் விரைந்து விடை கூறினான். ஆனாலும், அஃது ஆகவேண்டியதிற் பாதியே தான். நம்முடைய ஆட்கள் எங்கே இருக்கிறார்கள்? ன்னுஞ் சிறிது நேரத்தில் குமுதவல்லியையும் அவள் பாங்கிமாரையும் வழிமறித்துப் பிடிக்கிறதற்காக அவர்கள் வேண்டப்படுவார்கள்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/175&oldid=1581448" இலிருந்து மீள்விக்கப்பட்டது