உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

நீ

குமுதவல்லி நாகநாட்டரசி

147

'காதலிற் சிறந்த மீனாம்பாள், யான் தங்கியிருக்கும் இன்னபாயத்தின் விவரம் முழுமையும், யான் அனுப்பிய திருமுகத்தால் நீ தெரிந்திருக்கலாம்? இதன் பொருட்டாகவே, நீ பார்க்கச்சென்ற உன் உறவினர் வீட்டிலிருந்தே உன்னை அவ்வளவு திடீரென்னு வரவழைக்கலானேன். என்று அவன் தன் மனைவியை நோக்கிச் சொன்னான்.

"மேன்மை தங்கிய பெருமானே, யான் எல்லா விவரங் களையும் தெரிந்து கொண்டேன்.” என்று மீனாம்பாள் தன் கணவனின் அழகிய முகத்தை அன்போடும் வியப்போடும் நோக்கினவளாய் விடை பகர்ந்தாள். “ஆனால், குமுதவல்லியைப் பற்றியோ-”

66

தோ அவள் மோதிரம்” என்ற தன் வடிவத்தின்மேல் வெற்றிக்குறிப்புக் கிளர்ந்து தோன்ற நல்லான் மறுமொழி புகன்றான். “நான் மாத்திரம் மேற்கொள்ளும் எந்தக் கருமத் திலும் நான் வெற்றி பெறுகின்றேன்.”

அதன்பிறகு, அவன்தான் ன்னும் அணிந்திருக்கும் அவ்வேடத்தோடு, சத்திரத்தில் நிகழ்த்திய நடவடிக்கைகளை மீனாம்பாளுக்கு விரித்து உரைத்தான்; அவன் அவற்றைச் சொல்லி முடித்தவுடனே, அவன் மனையாள் “ஓ! என் அன்புள்ள காதலனே, ஒருவர் அறிந்தாலும் உயிர்க்கு இறுதியாய் முடியும் ஒரு நகரத்தின் நடுவிலே நீர் புகுந்தது எவ்வளவு முரட்டுத்தனம்?” என்று கூவினாள்.

66

"நீ என்னிடத்தில் வைத்திருக்கும் பற்றுதலின் மிகுதியைக் காட்டுவதனாலே இச்சொற்கள் என் காதிற்கு இனிமை தந்தாலும், என் காதலி, இத்தகைய அச்சத்திற்கு நீ இடங் கொடாதே." என்று அவன் மறுமொழி கூறினான்; “இப்போது நான் அவ்வளவு நன்றாய்ச் சித்தி பெற்றுவந்த துணிகரச் செய்கையை நான் துணிந்து செய்யவேண்டுவது எனக்கு அவசியமாய் இருந்தது. என்றாலும், மீனாம்பாள், நான் மிகவும் சாக்கிரதையாய் இருந்தேன்! குமுதவல்லியிருந்த அறையில் அவசியமாக இருக்கவேண்டியதற்கு மேல் ஒரு நிமிஷங்கூட நான் தங்கவில்லை அவள் அணிந்திருந்த மற்ற இரத்தினங்களை அகப்படுத்திக் கொள்ளவும் கூட நான் தங்கவில்லை; அலங்கார மேசைமேல் ஏராளமாய்ப் பரப்பி வைக்கப்பட்ட அணிகலங்களைக் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/176&oldid=1581449" இலிருந்து மீள்விக்கப்பட்டது