உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் - 13

எடுக்க நான் தங்கவில்லை. அதுவேயன்றியும், இராக்காலத்தில் காவல் அற்று உறங்கும் பெண்கள் உள்ள அறைக்குள் நுழைந்தபோது, பதுங்கிச் செல்லும் இழிந்த திருடன் போல் யான் நடக்க வேண்டி வந்ததைப்பற்றி என்னையே யான் இகழ்ந்து கொள்ளவேண்டியவனானேன் என்பதை வெளிவிட்டுச் சொல்லுகின்றேன். திறந்த பாட்டையில் செவ்வையாகப் படைக்கலம் பூண்டு பூண்டு செல்லும் பிரயாணிகளை மிகவுந் துணிகரமாய் எதிர்த்துவென்று கொள்ளை கொள்ளுஞ் செய்கைக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்?”

6

“ஆம், ஆம், என் பெருமானே, உங்கள் அலுவலில் கூடப் பராக்கிரமும் ஆண்மையும் இருக்கவேண்டியனவே.” என்று வியந்துகூறினாள் மீனாம்பாள்.

இங்ஙனம் இவ்விருவரும் தத்தம் நெறிவழுவின நடவடிக் கைகளோடு ஒன்றுபட்ட எண்ணங்களை எல்லாம் உயர்த்திக் காள்ளுதற் பொருட்டும், நாம் தலையிட்ட தொழில்களுக்கு ஆண்மை என்னும் மேல் மினுக்குப் பூசுதற் பொருட்டும் மிகவருந்தி முயன்றார்கள். அது, தனது தாழ்வினை மறைக்க முயன்ற பொய்ப்பெருமையோ அன்று தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொள்ள முயன்ற மனச்சான்றின் ஐயுறவோ அதுவும் அன்று; அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கும் போது அவர்கள் கண்களானவை அவர் தம் தீய செய்கைகளின் கருத்தைத் தாம் உணர்ந்தமை புலப்படுத்துமாயின் அவர்கள் தம்முட் பாராட்டிய மிக்க அன்பு பழுது படுமெனவும், அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் வைத்த நன்மதிப்புக்குறையப் பெறுவார் களாயின் அம்முறையே அவர்கள் அன்பானது நமது குற்றத்தை யுணரும் உணர்ச்சிவலியால் அழிவுபட்டுச் சுருங்குமெனவும் அஞ்சிய அச்சமே அவர்கள் அவ்வாறு உயர்த்திப்பேசிக் கொண்டதற்குக் காரணமாம்.

“நல்லதிப்போது, மீனாம்பாள்,” என்று நல்லான் பேசும் போதே சிறிது நிற்க, அப்போது அவ்விருவரின் கரிய கண்களும் ஆர்வத்தோடு ஒன்றை யொன்று நோக்கின. “குமுதவல்லியின் மோதிரம் உன்வசத்தில் உள்ளமையால் நாம் எடுத்த பெருங்காரியத்தில் முதற்பாகம் பாதிக்குமேல் நிறைவேறி விட்டது. என்காதலி, விடியற்காலையிலேயே நீ நீலகிரிக்குப் புறப்பட்டுப் போகலாம்; எச்சரிக்கையோடும் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/177&oldid=1581450" இலிருந்து மீள்விக்கப்பட்டது