உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

149

-

வேண்டியவனான சந்திரன் உன்னை உடனே வந்து காண்பன். நீலலோசனன் வந்து சேர்ந்தனனா என்பதையும் அவன் உனக்குச் சொல்லுவான்: அப்படி அவன் வந்திருப்பானாயின் நீ தாமதமின்றித் திரும்பி நமது மலையிலுள்ள வீட்டிற்கு வருவதைத்தவிர வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை ஏனெனில் எல்லா ஏற்பாடும் பிசகிப்போய் இருக்கும். ஆனால், அவ்வாறின்றி, நீலலோசனன் நீலகிரியில் இல்லாவிட்டால், இருக்கின்ற தெனவும், அவன் பிடிக்கப்பட்டிருக்கின்றான் எனவும், நமது மிகச் சிறந்த உபாயத்தை நிறைவேற்றுவித்ததற்கு நான் உன்னிடம் கடுகவந்து சேர்வேனெனவும் நீ முடிவு செய்து கொள்ளலாம்”

எல்லாம்

"இனிக்

சவ்வையாக

குமுதவல்லியைப் பற்றி என்ன?” என்று

மீனாம்பாள் வினவினாள்.

66

'இன்னுஞ்சில நாழிகைக்குள் நம்முடைய ஆட்கள் திரும்பி வராவிட்டால், நான் இருளனோடும் மாதவனோடும் சேர்ந்து புறப்படவேண்டியிருக்கும்; நாங்கள் மூவரும் குமுதவல்லியையும் அவள் தோழிமாரையும் சிறைப்படுத்த வேண்டாம். அல்லது ஒருவேளை அவள் தனது மந்திர மோதிரம் காணாமற் போனதைத் தெரிந்து கொண்டால், தான் நீலகிரி நகரத்திற்குப் பயணம் போவது பயனற்ற தென்று எண்ணித் துயரத்தோடும் திரும்பி நாகநாட்டிற்குப் போகலாம் - அங்ஙனம் நேருமாயின் நமது நோக்கம் மிக எளிதிலே நிறைவேறும், அவளுக்குச் சிறிதும் தொந்தரவு கொடுக்க வேண்டி இராது.” என்று நல்லான் மறுமொழி தந்தான்.

“பின் சொன்னபடியே தான் நிகழும் என்று நம்புகின்றேன். நல்லது, எம் பெருமானே, இந்தத் துணிகரமான செய்கையில் நாம் சித்தி பெற்றால் அடைவது இன்னது என்பதனை எனக்குச் சொல்லும்.” என்று மீனாம்பாள் வினவினாள்.

"ஓ அப்படியா, மீனாம்பாள்." என்று தன் அழகியகரிய கண்களிலே மனக்களிப்புப் பளீரென மின்னக்கூவி, “துணிகரச் செய்கையினை எழுப்புவதும், மனவுற்சாகத்தை உந்துவது மாயிருந்தாலும், கலக்கத்தினையும் ஆபத்தினையும் விளைப்ப தான வாழ்க்கையை நடத்த வேண்டுவது இனி எனக்கு அவசிய மாய் இராது. ஆம் என் காதலி மீனாம்பாள்! நாம் தொலைவி

னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/178&oldid=1581451" இலிருந்து மீள்விக்கப்பட்டது