உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 13

லுள்ள ஏதேனும் ஒரு நகரத்திற்குப்போய், நம்முந்தின செய்கை கள் முற்றுந் தெரியாவண்ணம் அங்கே வேறுபெயர் வைத்துக் கொண்டு நம்வசத்தில் வருவதான எல்லையற்ற செல்வத்தை அநுபவித்துக்கொண்டிருப்பது மிக நல்லது, அல்லது அப்படி யல்லா விட்டால், மீனாம்பாள், நாம் விரைவில் அடையப் போவதாகிய இரகசிய வழியாம் பெறப்படும் இனி மலைய வேலியின்கண் தன்னிடத்துள்ள வெல்லாம் ஏராளமாய் அமைதியும் அழகும் வாய்ந்திருப்ப, என்றும் இளவேனிலே அரசிருப்ப, மாரிக்காலத்தின் குளிரானது காணாது ஒழிய, தன் னியதனியிடங்களிற் புயற்காற்றே நுழைய மாட்டாதாக விளங்கும் தாமரை வேலியின்கண் இருக்கையமைத்துக்கொண்டு இவ்வுலக வாழ்வையே நாம் முற்றுந்துறந்து விடுவோமாக!” என்று நல்லவன் இயம்பினான்.

66

-

'ஆ, அதுவே உண்மையான இன்பம்!” என்று தன் கணவன் அவ்வளவு சொற் சாதுரியம் பட வரைந்த ஓவியத்தின் நிறைந்த அழகால் தன்னுயிர் கலவரப்பட்டாற்போல மீனாம்பாள் அடங்கின குரலில் விளம்பினாள்; அவள் அழகின் மிக்க தன்தலையை அக்கள்வர் தலைவன் தோள்மேற் சாய்த்துக்

காண்டு தன் சிறந்தகரிய விழிகளால் அவன் விழிகளை நோக்கினாள். “ஆம், அத்தானே." என்று அவள் பின்னுந் தொடர்ந்து, “பிந்தின முறையே எனக்கு இசைந்ததாக இருக்கின் றது. ஓ! இந்நிலவுலகத்திலே துறக்க நாடென்னும் அதன்கண் உள்ள கொடிப்பந்தர்ச் சுற்றுகளின் இடையே திரிவதும் அதன்பழங்களைத் தின்பதும், அம்மலைய வேலியிற் பளிங்கு போலுந் தெண்ணீரைப் பருகுவதும்-உலகமங்கையின் கொடைப் பொருளெல்லாம் மிகவும் ஏராளமாய்ச் சொரியப் பட்டுக், குவிந்துயர்ந்த மலைக்குவடுகள் வைரச்சுவர் எழுப்பி னாற் போல் அரைப்பட்டிகையாய்ச் சூழ்ந்து காப்பத் தோன்றும் அவ்விளம் பொழிலிலே நம்முதற் றாய்தந்தையர் அடிச்சுவடு களின் மேல் அடி வைத்துச் செல்வதும் எவ்வளவு இனிமை யாயிருக்கும்!” என்று மொழிந்தாள்.

66

‘என்றாலும்,” என்று நல்லான் புன் முறுவல் செய்து, “என் அழகிய மீனாம்பாள், நாம் தாமரை வேலியிலேயே தங்கி விட்டோமானால் நாம் அங்கே கண்டெடுக்கும் அளவற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/179&oldid=1581452" இலிருந்து மீள்விக்கப்பட்டது