உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

151

நிதியினை எவ்வாறு பயன் படுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை.” என்று மறுமொழி புகன்றான்.

66

'ஆ! நான் இன்னும் முடியச் சொல்லவில்லை!” என்று அக் கள்வர் தலைவன் மனையாள் கூறினாள். “சிலகாலம் இன்பம் நுகர்ந்தபின் அது தெவிட்டிப்போவதும், முழுதும் இனிமை யால் ஆக்கப்பட்ட எவ்வகையான வாழ்க்கையிலும் உவர்ப்புத் தோன்றுவதும் மக்களியற்கைக்கு உரிய ஊழ்வினை யாய் இருக்கின்றன. நாம் எடுத்த தருமத்தில் சித்திபெற்றோம் என்றே எப்போதும் பாவித்துக்கொண்டு, எல்லாவகையான இன்பங் களும் நுகருதற்கு நமது செல்வம் உதவியாகும் படியான ஒரு சிறந்த நகரத்திலும், அச்செல்வம் முழுதற்கும் பிறப்பிடமான அவ்வினிய வேலியிலும், ஆக நமது காலத்தை நாம் இரண்டு கூறிட்டுக் கொள்ளலாம் என்று என்னுள்ளே அங்ஙனம் புனைந்து பார்த்துக் காண்டிருந்தேன், என் பெருமானே!. நகரவாழ்க்கையின் இன்பங்களும், செழும் பொருள் நுகர்ச்சியும் தெவிட்டிப் போனபின், சிலகாலம் நாம் அவ்விளம் பொழிலின் அமைந்த தனியிடங்களிற் போயிருக்கலாம்; அதன்பிற் சில காலங்கழித்துத் தாமரைவேலியின் மலை வரம்புகளுக்கு அப்பால் உள்ள களிப்பும் பரபரப்பும் பொருந்தின உலகின் இன்பங்களை துய்த்ததற்குத் திரும்பவும் எழும் வேட்கையோடு நாம் மறுபடியும் வெளிப்புறப்படலாம்.”

இங்ஙனம் நல்லானும் அவன் அழகிற் சிறந்த மனையாளும் ஒருங்கு அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தனர்;

சிறு

குழந்தையைப்போல உறுதிப்படாதவற்றில் அவர்கள் வீண் எண்ணப்பாங்கு நாட்டினராயினும், வருங்காலத்தைப் பற்றின இனிய கனவின் கண் ஆழ்ந்தனராயினும், தமக்குள் இன்பத்தை விளைவிக்கவும், அவ்வளவு சொல் நயத்தோடும் புனைந்துரைத்த இன்பவாழ்வினைப் பெறுதற்குத் தம்மைத் தகுதியுடையரெனத் தாம் உணர்ந்தாற் போற் பேசவும் அவர்கள் தமக்குள் மறுபடியும் முயன்றனர். விழித்திருந்து காணுங் காட்சிகளைப் பற்றிப் பேசுவது போல் அவர்கள் அங்ஙனம் உரையாடின எல்லாவற்றையும் தாம் மெய்யாகவே அடைவதற்கு நல்ல சமயம் வாய்த்ததெனத் தம்முளே அவர்கள் எண்ணி மகிழ்ந்து கொண்டார்களென்பதும் ஆண்டே அறியற் பாற்று; ஏனென்றால், பின்றொடரும் தன் ஆட்களுக்கு நீலலோசனன் கடைசியாகத் தப்பிப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/180&oldid=1581453" இலிருந்து மீள்விக்கப்பட்டது