உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் 13

விடுவானென்றாவது, அவனும் அவன் துணைவர் இருவரும் தான் முதலில் விடுத்தவர்களை எளிதிற் செயித்தது போல இரண்டாந்தரம் விடுத்தவர்களையும் அங்ஙனம் வென்று விடுவாரென்றாவது மாட்டாதவனானான்.

நல்லான்

எண்ணங்

காள்ள

மறுநாள் விடியற்காலையில் நல்லானும், மீனாம்பாளும் மறுபடியும் சிலநாட் பிரிந்திருக்க விடைபெற்றுக் கொண்டனர்; மீனாம்பாள் தன் மலைநாட்டுப் பணிப்பெண்ணும் காப்பிரி மாதும் முன்போலவே தன் பின்னே வரப் பயணம் புறப்பட்டாள். அவர்கள் அங்ஙனம் புறப்பட்டுப்போன சிறிது நேரத்திற்குப் பிறகு, தன் சொந்த உடுப்பை மறுபடியும் அணிந்து கொண்டவ னான அக்கள்வர் தலைவன், பெளத்தர் மூவர் பின்னே தொடர்ந்து அனுப்பப்பட்ட தன் ஆட்கள் வந்து சேராமைகண்டு இருளனையும் மாதவனையும் தன் பின்னேவரக் கற்பித்தான். அவர்கள் தங்கள் குதிரைகளின் மேல் ஏறிக்கொண்டு, ஒரு சுற்று வழியாகப் போய்க் குமுதவல்லி ஓர் இரவு தங்கியிருந்ததும் நல்லான் அம்மோதிரத்தைக் கவர்ந்து கொண்டதுமான அந்த நகரத்தைத் தாண்டிவந்து சேர்ந்தார்கள். சேர்ந்து, நீலகிரியை நோக்கிப் பயணம் போம்பொழுது குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் செல்லவேண்டிய பாதையோரமாய் உள்ள ஒரு தோப்பின் செறிந்த சூழல்களிலே அவனும் அவன் ஆட்கள் இருவரும் ஒளிந்து கொண்டார்கள்; ஏனெனில், மோதிரம் காணாமற் போனபின்னும், பயங்கரனான நல்லான் அங்கே வந்திருந்தானென்பது சத்திரத்தில் நிச்சயமாகத் தெரிந்தபிறகும், குமுதவல்லி படைக்கலம் பூண்டோரை வழித்துணைகொண்டு ஏகுவாளென்பது கூடாதது அன்றெனக் கொள்ளைத் தலைவன் எண்ணினானேனும், அவ்வழித் துணை அவ்வளவு பெரிதாக இருக்குமென்பது அவனுக்குச் சிறிதுந் தென்படவில்லை. ஆகவே, தனது ஒளிப்பிடத்திலிருந்து நல்லான், குமுத வல்லியும்அவன் பாங்கிமாரும் நன்கு படைக்கலம் பூண்ட வலிய ஆட்கள் பன்னிருவர் பின்னேவரச் சவாரிபோதலைக் காண்டலும் தான் எதற்குந்துணிந்த அஞ்சாநெஞ்சினனா யிருந்தும் அவ்வழித் துணைவரை எதிர்க்க அவன் துணிவில்லை. மாதவனோ ன் நம்பிக்கையுள்ள உளவாளியாய் மிகத் தேர்ந்தவனே அல்லாமல், படைக்கலஞ் சுழற்றும் வீரச்செய்கையில் நம்பத் தக்கவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/181&oldid=1581454" இலிருந்து மீள்விக்கப்பட்டது