உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

153

அல்லன்; எனவே, தான் துணிந்து சண்டையில் தலையிட்டுக் கொள்ளானாயின் தானும் இருளனுமே போர் முனையைத் தாங்கவேண்டி வருமெனக் கள்வர்தலைவன் அறிந்தான். அஞ்சத் தக்க அம்மிஞ்சின கூட்டத்தோடு எதிர்ப்பது வெறிபிடித்த செய்கையாகுமேயன்றி வேறன்று: அதனால், நல்லான், அப்பெருமாட்டியையும் அவள் தோழிமாரையும் அவர் வழித்துணைவரையும் போக

விடலானான்.

தொல்லைப்படுத்தாமல்

இது நல்லானுக்கு மற்றுமொரு பயங்கரமான ஏமாற்றமாய் முடிந்தது; அவனுடைய சூழ்ச்சிகளெல்லாம் பாழாய் விடு மெனவும் அச்சுறுத்திற்று.ஏனென்றால், குமுதவல்லி நீலகிரிக்குச் சென்று சேர்ந்து விடுவாளாயின், நீலலோசனன் இடையே தன் கையில் அகப்பட்டுக்கொண்ட போதிலும், மீனாம்பாள் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட காரியத்தை முடிப்பது ஆகாதென்று அவன் கண்டான். கழிந்த இராநடுவில் தான் புறப்படும் நிமிஷத்தில், சத்திர முற்றத்தினுள்ளே அந்தக் குடகுநாட்டு வியாபாரியை நுழைவித்த தீவினையை நல்லான் மிக நொந்து கொண்டான்; ஏனெனின் அவ்வியாபாரி தன்னைத் தெரிந்து கொண்டதனாலே தான் குமுதவல்லி அவ்வளவு அஞ்சத்தக்க வழித் துணைகொண்டு பயணம் போகலானாள் என்று அக்கள்வர் தலைவன் எண்ணினான். குமுதவல்லி சிறிது நேரத்தில் அவ்வழித்துணையை விட்டு விட்டு, வேறு தங்குமிடம் போகும் வரையில் படைக்கலம் பூண்ட இரண்டு பெயரை மாத்திரம் கூட்டிச் செல்வர் என்பது அவனறிவிற் படாமற் போனது இயல்பேயாம்: அவன் நடவடிக்கைகளில் அந்த வகையான ஒரு மாறுதல் நிகழுமென அத்தலைவன் முன்னமே உணர்தலாவது ஊகித்தலாவது செய்யக்கூடவில்லை; வில்லை; - ஆகவே, அவன் எந்தவகையாக நடந்துகொள்வதென்று சிறிது நேரம் கலக்கமுற்று நின்றான். என்றாலும், திடீரென்று அவனுக்கு ஓர் எண்ணம் தட்டுப்பட்டது.

66

.

“நான் நீலகிரிக்குப்போய், யாரும் அங்கே வந்து சேர் வதற்கு முன்னமே சந்திரனிடம் எல்லாம் தெரிவித்து விட்டால் என்ன? அப்படிச் செய்வேனானால் எந்த வழியிலாவது நான் குமுதவல்லியைத் தொலைத்து விடலாம்; அல்லது, நீலலோ சனன் தன்னைத் தேடித்திரியும் என் ஆட்களைத் தப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/182&oldid=1581455" இலிருந்து மீள்விக்கப்பட்டது