உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் 13

வந்திருந்தானானாலும் அவளையும் அவ்வாறே செய்து விடலாம்! ஆம் - இந்தப்படியே செய்யக்கடவேன்.’

ங்ஙனம் நல்லான் தனக்குள் தானே சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அருளனும் மாதவனும் பேசாமல் அவனைப் பார்த்துக் கொண்டே யிருந்தனர்; ஏனெனில், தங்கள் கொண்டேயிருந்தனர்; தலைவன் ஏதோ ஓர் உபாயத்தைத் தன் உள்ளத்தில் சிந்தனை செய்கின்றானென்று அவர்கள் கண் கண்டு காண்டார்கள். மற்றொரு முறையும் நல்லானும் மாதவனும் உடைமாற்றிக் கொண்டார்கள்; அதன் பிறகு, கள்வர் தலைவன் இருளனுக்குப் பலவகை முறைகளைக் கற்பித்து, விசேடமான சம்பவங்கள் தோன்றுமானால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ப தையும் போதித்தான். இருளனும் தன்மேலவன் கற்பித்தவற்றை முற்றும் அறிந்து கொண்டான்; இராச பாட்டையைச் சாக்கிரதையாக அகன்று, நீலகிரியை நோக்கி நல்லான் பயணம் புறப்பட்டான். எனவே, அவன் குமுதவல்லியைத் தொடர்ந்து பற்றவும் இல்லை, பௌத்தர் மூவரைச் சென்று சந்திக்கவும் இல்லை என்பதை நாம் கண்டுகொண்டோம்.

காப்பிரிமாதும் தன் அழகிய மலையநாட்டுப் பணிப் பெண்களும் பின்னேவர நீலகிரி நகரத்திற்கு அங்ஙனமே தான் பயணம் புறப்படும் சமயத்தில் நாம் விட்டுவந்த மீனாம்பாளிடம் வி இப்போது நாம் திரும்புவோமாக. நீலலோசனனையும் அவன் துணைவரையும் தாம் தற்செயலாகக் சந்திக்கும்படி நேருமோ என்னும் அச்சத்தால் இராசபாட்டையை விட்டுப்போவது

இவர்கள் நோக்கத்திற்கும் இணங்கினதாய் இருந்தது. இடையிடையே தாமும் தங்குதிரைகளும் இளைப்பாற டங்கொடுத்துக்கொண்டு, அந்தப் பகல்முழுவதும் அவர்கள் தொடர்ந்து வழிச்சென்றார்கள்; சாயங்காலம் அணுகியவுடன் ஓர் ஊரிலே சத்திரத்தில் தங்கினார்கள். மலைய நாட்டு விதவை வாயினின்றும் துயரமான கதையைக் கேட்டுக் கொண்டு குமுதவல்லியும்ட அவள்பாங்கிமாரும் அம்மனையகத்திற் கழித்த அதே இரவு தான் து என்று இதனைப்படிப்போர் உணரவேண்டும், வழிநாட்காலையில் மீனாம்பாள் மறுபடியும் நீலகிரிக்குப் பயணந்துவங்கினாள், - அத்தனைவிரைவில் தன்கணவனும் அந்தமுகமாகவே செல்லும்படி நேருமென்பதை அவள் சிறிதும் உணரவில்லை. குமுதவல்லியும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/183&oldid=1581456" இலிருந்து மீள்விக்கப்பட்டது