உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

155

தோழிகளும்நல்லான்கையில் அகப்பட்டிருப்பார்கள் என்பதில் அவள் ஐயப்படவில்லை. நீலலோசனனும் தன்பின்னே தொடர்ந் தனுப்பப்பட்ட ஆட்களால் அவ்வாறே பிடிபட்டிருப்பான் என்று ஆவலோடு எண்ணினாள். அங்ஙனம் அல்லாமல், அவன் நீலகிரி நகரத்திற்குப் போய்ச்சேரப் பெற்றிருப்பானானால், தான் அவ்விடத்திற்குச்செல்லும் பயணம் முற்றிலுஞ் சிதைவுபடும் என்று உணர்ந்தாள்.

உச்சிப்பொழுதிற் பகலவன் எப்போதினும் உள்ள புழுக்கத்தைவிட மிகுந்த புழுக்கத்தோடும் தன் வெங்கதிர்களை அம்மலைநாட்டு நிலப்பகுதிகளின் மேற் சொரிவானாயினான்; அச்சமயத்தில் மீனாம்பாளும் அவள் பணிப்பெண்களும் தங்குதவதற்கு மிகவும் இசைவாய்க்காணப்பட்ட ஓர் இடந் தண்டைவந்து சேர்ந்தனர். அவள் நீலலோசனனை எதிர்ப் பட்டதும், பல மைல்தூரம் உள்ளதுமான அந்தத்தெளிநீர் வேலியோடு அஃது ஒப்புமையுற்றுத் தோன்றியது.ஏனென்றால் நாம் இப்போது பேசுகின்ற இந்த இடத்தில் ஒருதெளிவான நீரோடையானது பழம் நிரம்பின மரங்கள் நிழற்றும் மெல்லிய பசிய மேட்டு நிலத்ததைக்கடந்து சிலுசிலுவென்று ஓடியது. அங்கே அவ்வாறே அவர்கள் தங்கினார்கள்; அந்தக் காப்பிரிப்பெண்ணின் வசத்தில் உள்ளதும் அவள்தன் குதிரைச் சேணத்தின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்ததுமான ஒரு சிறுகைக்கூடாரம் விரைவில் விரித்து ஊன்றப்பட்டது. என்றா லும், மீனாம்பாள் அக்கூடாரத்தின் கீழ்க்கிடந்து இளைப்பாற விரும்பவில்லை; அவள் அவ்வோடையில் ஓரத்தே யுள்ள புல்லின் மேல் உட்கார்ந்து பலவாறு சிந்தித்துக் கொண்டிருந் தாள்; அத்தனை பற்றுதலோடு தான் காதலித்த தன் கணவனையும் மலைநாட்டின் தென்பகுதியில் நல்லபெயர்வாய்ந்த தன் இல்லத்தை அவன் பொருட்டுத் தான் விட்டுவந்ததையும் எண்ணினாள். சிலநாட்களுக்கு முன் தான் பார்க்கப் போயிருந்த தன் பெற்றோரையும், தான் மணந்து கொண்ட அவன் பயங்கர மான நல்லானே என்று அவர்கள் சிறிதுஞ் சமுசயப்படாததையும் அங்ஙனமே அவள் எண்ணினாள். அவற்றின்பின் தானும் தன்கணவனும் மேற்கொண்டிருக்கும் அரிய செயலைப்பற்றி சிந்திப்பாளானாள்; அதனால்வரும் பயன் பயனின்மைகளையும் கணக்கிட்டுப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/184&oldid=1581457" இலிருந்து மீள்விக்கப்பட்டது