உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

-

மறைமலையம்

13

6

அல்லல்களையும் தான் உழந்தபிறகு பத்திரமாக அங்குவந்து சேர்ந்ததை நினைக்கவே அவள் நெஞ்சம் களிப்பால் தளும்பிற்று. அவள் முகத்தில் மேல் இப்போது சிறையில் முக்காடு இடப்பட்டது அதனைப் பார்த்து அவள் பாங்கி யாரும் அங்ஙனமே முக்காடிட்டுக் கொண்டனர். ஆகவே, அவள் முகத்தின் பேரழகும், சுந்தராம்பாள் ஞானாம்பாள்களின் முகவெட்டும் பிறர் பார்வை படாமல் மறைபட்டன. என்றாலும், மறைபட்டன.என்றாலும், அவள் நீலகிரி நகரின் சுற்றெல்லையில் நுழையுங்கால் அங்கே ஏதோ சிலவற்றைக்கேட்டுத் தெரிந்துகொண்டு தெருக்களின் ஊடே செல்லுகையில், களங்கமற்ற அவள் உடம்பின் திருந்திய அமைப்பும், அவள் தனது குதிரைமேல் இருந்த அழகிய இலாவகமும், அதனை அவள் நடத்திய திறமும் வழிசெல்வோர் கருத்தைத் கவராமற் போகவில்லை. அங்கே கேட்டது மனோகரர் என்னும் பெயருள்ள மலைநாட்டு வியாபாரி ஒருவர் இருப்பிட விவரமேயாம்; அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தற்கு வேண்டிய குறிப்புகள் உடனே சொல்லப்பட்டன- ஏனென்றால், மனோகரர் செல்வமும், முதிர்ந்த அறிவும், பெருந்தன்மையும் வாய்ந்தவர், அதனால் அவர் குடியிருந்த அந்நகரம் முழுதும் அவரை யறியாதவர் இல்லை.

குமுதவல்லி நீலகிரியின் நடுமையம் வரையிற் சென்றாள்; பெரியனவாய்ப் பார்வைக்கு அழகான மாளிகைகள் இருபக் கத்தும் உள்ள மிக அகன்ற தெருக்கள் ஒன்றின் இடையிற் கடை சி யாக வந்து நின்றாள். மனோகரர் என்னும் பணக்கார வியா பாரிக்கு உரிய வீடு இதுதான் என்று அவளுக்கு திட்டமாயம் தெரியாது; ஆகவே, எவரிடத்து அதனைக் கேட்டறியலாம் என்று அவள் சுற்றி நோக்குகையில், அவளது வலதுகைப்பக்கமாய் மிக அருகில் இருந்த ஒரு பெரிய வாயினுள்ளிருந்து ஓர் இளைஞன் திடீரென வந்தான்; உடனே சந்திரன் என்னும் பெயர் குமுதவல்லியின் வாயிலிருந்து வந்தது;

உண்மையிலே, வந்தவன் சந்திரன்தான் - இக்கதையின் முதலதிகாரத்தில் நாம் தெரிவித்த, பதினெட்டு வயதுள்ள, தனி அழகு வாய்ந்த அந்த இளைஞனே. அப்போது அவன் வழி நடைக்கு ஏற்ற உடுப்பு அணிந்திருக்க கண்டோம். ஆனால் ப்போது அவன் அணிந்திருந்த உடையோ முன்னிலும் மிக நொய்தாயும் வளமுள்ளதாயும் இருந்தது. வானத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/221&oldid=1581494" இலிருந்து மீள்விக்கப்பட்டது