உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

அதிகாரம் - 12 நீலகிரி நகரம்

சென்ற அதிகாரத்தின் கடைசியில் விரித்துச் சொல்லப் பட்டபடி தன் தோழிப்பெண்கள் பின்னேவரக் குமுதவல்லி பயணந் தொடங்கியபோது பிற்பகலில் இருபத்தைந்து நாழிகை யாயிற்று. மலைநாட்டுத் தலைநகராகிய நீலகிரி இன்னும் இருபதுமைல் தூரத்திலிருந்தது; ஆயினும், நம்முடைய பிரயாணிகள் இப்போது செல்லும் பாட்டையானது நல்லதா யிருந்தமையினாலும், மீனாம்பாளின் கூடாரம் அடிக்கப் பட்டிருந்த தோப்பின்கண் ஐந்து நாழிகைக்கு மேல் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்கள் குதிரைகள் நன்கு இளைப்பாறி யிருந்தமையாலும், அவர்கள் ஏழரை நாழிகை நேரத்தில் அவ்விருபதுகல் தூரத்தையுங் கடந்து வந்தார்கள்; சொல்லத் தகுந்தது ஏதும் வழியில் நிகழவில்லை, நாம் பெரிதும் விரிந்து உரைத்த துயரமான காரியம் நிகழ்ந்த இடத்தினின்று புறப்பட்ட பிறகு குமுதவல்லி தான் முதலிற் புகுந்த ஊரிலேயே தனக்குத் தக்க வழித்துணையாகப் படைக்கலம் பூண்ட ஆடவரைத் தெரிந்து ஏற்படுத்திக் கொண்டாள்; ஆனாலும் மெய்காப்பாளர் ஊழியத்தை வேண்டத்தக்கது எதுவும் நேரவில்லை. ஆகவே, நீலகிரி நகரத்திற்கு அண்டையிலுள்ள பேட்டைக்கு நெருங்கிய வுடனே குமுதவல்லி தாராளமாகப் பரிசுகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டாள். அதன்பின்னர் அவள் சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் மாத்திரம் தன்பின்னேவர நகரத்தினுள் நுழைந்தாள்.

அங்ஙனம் அவள் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபோது, சிறந்த வேனிற் காலத்தின் மாலை பொழுதா யிருந்தமையால் ஏழு மணி ஆகியும் இன்னும் நல்ல வெளிச்சம் இருந்தது; நாகநாட்டி லிருந்து வந்த நீண்ட பயணத்தின் பல இடைஞ்சல் களையும் பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/220&oldid=1581493" இலிருந்து மீள்விக்கப்பட்டது