உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் 13

என்பவள் நல்லானுக்கு மனைவியேயல்லாமல் பிறர் அல்லர் என்பதை இன்னும் மிகுந்த வியப்போடு இப்போது அவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

“என்றாலும், நானே வலிந்து சென்று அக்கள்வனுக்குப் ழுதுசெய்யமாட்டேனென்று உறுதிமொழி சொல்லியிருக் கின்றேன்; ஆகையால், என் தோழிமார்களே, உங்கள் தலை வியைக் கட்டுப்படுத்தியிருக்கும் ஆணையை நீங்களும் பாது காக்கவேண்டும்” என்று குமுதவல்லி அழுத்தமாகச் சொன்னாள்.

(6.

அங்ஙனஞ் சொல்லப்பட்ட கட்டளைப்படியே நடப்ப தாகச் சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் உறுதிமொழி புகன் றார்கள்; உடனே பயணந் தொடங்கலாயிற்று. மிகவுந் திகிலான அத்துயரநிகழ்ச்சி நிகழ்ந்த இடத்தின் அருகே செல்லவேண்டுவ தில்லாதபடி அந்தத் தோப்பிலுள்ள மற்றொரு திறப்பானவழி பயணம் போவதற்கு உதவியாயிற்று; விரைவில் ஒரு பெரும் ரு பாட்டையில் வந்து சேர்ந்தார்கள்; அப்போது அவ்வழியே போகும்படி நேர்ந்த ஒரு குடியானவன் அதுதான் நீலகிரி நகரத்திற்கு நேரான பாதை யென்றும் அந்நகரம் இருபது கல்லுக்குமேற் சிறிதுதூரந்தான் இருக்குமென்றும் நாக நாட்டரசிக்கு உறுதிப்படச்சொன்னான்.

மீனாம்பாளின் துயரமான முடிவை எண்ணி மிகுந்த இரக்கமும் தனது மோதிரம் திரும்ப வந்ததற்கு மிகுந்த களிப்பும் ஆக ஒன்றோடொன்று மாறுபட்ட பல விளைவுகளால் தன் க மெல்லிய நெஞ்சம் கலக்கம் எய்தக் குமுதவல்லி தன்வழியே போயினாள்.

இளமையும் அழகும் வாய்ந்த நீலலோசனனை அச்சுறுத் துங்கொள்ளைத் தலைவன் நல்லானாகக் குமுதவல்லி பிழைபட நினைந்த எண்ணத்தை மாற்றுதற்குரிய சொற்கள் எவையும் மீனாம்பாள் வாயிலிருந்து வரவில்லை என்பதை இதனைக் கற்போர் நினைவில் வைக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/219&oldid=1581492" இலிருந்து மீள்விக்கப்பட்டது