உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

189

மாதையும் மலையநாட்டுப் பணிப்பெண்ணையும் அவள் ஆற்றுதற்கு முயன்றாள். செய்யத்தக்க சவச் சடங்குகள் எங்கே செய்யப்படுமோ அங்கே பிணத்தை எடுத்துச் செல்வதற்குரிய ஒழுங்குகள் செய்யவேண்டுவது இப்போது அவர்கள் கடமை என்பதை அவள் அவர்களுக்கு நினைப்பூட்டினாள்; ஆனாலும், அவ்விஷயத்தைப்பற்றி அவள் ஏதும் ஏனென்றால் நல்லான் இருக்கும் இருப்பிடத்தைப்பற்றித் தெரிந்துக்கொள்ள அவள் நாடவில்லை.

கேட்கவில்லை

.

அவ்வாறு குமுதவல்லி பேசிய அவ்விருதோழிப் பெண் களும் தமக்குரிய கடமையைப்பற்றி நினைக்கும்படி தூண்டப் பட்டார்கள்; உடனே அவர்கள் மனக்கலக்கத்தை ஒருவாறு ஆற்றிக்கொண்டு தங்கள் தலைவிகிடந்த இடத் தண்டை துயரமான பார்வையோடும் மெதுவான நடையோடும் சென் றார்கள். காலந்தாழாமல் உடனே நீலகிரிக்குப் பயணந் துவங்கும் படி தனக்கு மீனாம்பாள் அக்கறையோடு சொல்லி யதை குமுத வல்லி இப்போது நினைவுகூர்ந்தாள்; அவள் உடனே கருத்தைத் தன்தோழிமார்களுக்குத் தெரிவித்தாள். அவர் களுக்குப் பயணந் தொடங்கவேண்டியதைக் கற்பித்து விட்டு ஈர நெஞ்சமுள்ள அம்மாதாரர் போதுமானவரையில் நல்லெண் ணத்தோடு மீனாம்பாளுக்கு உபசாரங்கள் புரிந்த திகழ்கலை ஏதுங் கைம்மாறு பெறாமல் நிற்பதையும் அங்ஙனமே நினைவு கூர்ந்தாள் - ஆகவே, அவள் ஞானாம்பாள் கையில் ஒரு பொன் நாணயத்தைக் கொடுத்து, அக்கொள்ளைத் தலைவன் மனைவி கிடந்த நீரோட்டத்தின் கரையண்டைக் காப்பிரிப் பெண் ணோடும் மலையநாட்டுப் பணிப்பெண்ணோடும் பின்சென்ற திகழ்கலைக்கு அதனைக் கொடுக்கும்படி அவளை அனுப்பினாள். ஞானாம்பாளும் அவ்வாறே அதனைச்செய்து முடித்து, அவ்வறிவோள் குமுதவல்லிக்கு நெஞ்சாரச் சொல்லிய நன்றி மொழிகளைத் தெரிவிக்கும்படி கடுகத் திரும்பினார்கள்.

மரங்களுக்கு நடுவே மறைபட்டிருந்த கூடாரத்திற்கு அருகாமையில் தங்கள் குதிரைகள் கொழும்புல் மேய்ந்து காண்டிருத்தலை நாகநாட்டரசியும் அவள் தோழிப் பெண் களும் கண்டார்கள். சுந்தராம்பாளும் ஞானாம்பாளும் காணாமற் போன மோதிரம் தம் தலைவியினிடத்தில் திரும்பவும் வந்திருத் தலை வியப்போடும் களிப்போடும் பார்த்தார்கள்; மீனாம்பாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/218&oldid=1581491" இலிருந்து மீள்விக்கப்பட்டது