உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

  • மறைமலையம் 13

பெறுவதுமான அவள் முகத்தை அளவிறந்த துயரத்தோடும் கண்ணிமையாமல் நோக்கினாள்.

66

எவ்வளவு

இவள் இப்படியா இறக்கலானாள்? அச்சத்தோடு வாழ்ந்தனளோ அவ்வளவு அச்சத்துடன் இறந்த னள்! வேண்டுமானால் மிக உயர்ந்த நிலையினையும் தருதற்குரிய அழகிற்சிறந்த இம்மாது ஒரு கொள்ளைக்காரனுக்கு மனைவி யாகி, அவனது திருட்டுத் தொழிலிலும் கலந்திருந்தனளே! இவள் திரும்பவும் உயிர் பிழைத்து வாழக்கூடுமாயின், முன் நாட்களில் தன்னை மலினப்படுத்தி இழிவு செய்த குற்றங்களுக்குப் பின்நாட்களிற் பரிகாரந்தேடி யிருப்பளே! அந்தோ! இப்போது இவள் விட்டுச்சென்ற ஒளி நிறைந்த இவ்வினிய நிலவுலகத்திற்கு இவள் திரும்பவும் வரும்படி செய்யக்கூடிய அற்புதம் ஒன்றும் இல்லையா! ஐயோ! இவள் இங்கே உயிர்அற்ற பிணமாய்க் கிடக்கின்றனளே!" என்று குமுதவல்லி தனக்குட் சொல்லி இரங்கினாள்.

குமுதவல்லி, தன் கண்களை மங்கச் செய்யும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்; மற்றப்பெண் பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து நின்ற அவ்விடத்திற்கு அவள் மெதுவாய்ச் சென்றாள். அவள் முகத்திலிருந்து உடனே உண்மை இன்னதென்று புலப்படலாயிற்று. அதனை அவ்வாறு தெரிந்து கொண்டவர் களெல்லாம் மனத்துயரத்தால் தாக்குண்டார்கள்; ஆனால், காப்பிரிமாதும் மலையநாட்டுப் பணிப்பெண்ணும் மிக்கதுயரத் தோடும் புலம்பி அழுவாரானார்கள்.

cc

ஆண்டவன் திருவுள்ளப்படி தான் நடக்கும்! ஊழ் வினைக்கு மாறாய் உதவக்கூடிய மருந்து எதுவும் இல்லை. தீவினைக்கு எதிராய் மருத்துவனுடைய திறமை போராட மாட்டாது. ஏது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும்: இறைவன் திருவருள் சிறப்பதாக!” என்று திகழ்தலை கூறினாள்.

இந்தப் பெண்பிள்ளையின் பசபசப்புப்பேச்சு முன்னே தீங்கற்றதாகக் குமுதவல்லியால் எண்ணப்படினும், அவள் தன் திறமையற்ற பழக்க மருத்துவத்தை மெழுகிப்பேச எடுத்த பாசாங் காகாவே இருந்தமையால், இப்போது அஃது அருவருக்கத் தக்கதாகவே தோன்றியது. ஆகவே, நாகநாட்டரசி அவ்வறி வோளை விட்டு அப்புறம் திரும்பிப்போயினாள்; காப்பிரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/217&oldid=1581490" இலிருந்து மீள்விக்கப்பட்டது