உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

187

ஆவலுற்று மிகுந்த கவலையோடும் அவள்மேற் குனிந்தாள்; ஆனால் இப்போது மீனாம்பாள் சிறிதும் அசைவின்றிக் ஆ கிடந்தாள் உயிர் போய்விட்டதென்றே நாகநாட்டரசி அஞ்சினாள்.

-

கடைசியாகத், தொலைவிலே ஒருவர் சொல்லிய ஒரு பெயரைத் திரும்பச்சொல்லும் எதிரொலியைப்போல, மிகவும் மங்கலான குரலில் அக்கொள்ளைத்தலைவன் மனைவி முணுமுணுவென்று கூறுவாள். “குமுதவல்லி, இந்த மேலான சமயத்தில் கடவுளின் திருவருளால் ஒரு தேவதூதன் என்னிடம் அனுப்பப்பட்டிருக்கின்றார்! - எச்சரிக்கையா யிருங்கள் - பற்றி -

எச்சரிக்கையா யிருங்கள்-'

""

சிறிது நின்று மீனாம்பாள் ஒரு பெயரை மெல்லச் சொன்னாள்: சில நிமிஷங்களுக்குமுன் குமுதவல்லியின் சொந்தப்பெயரை அவள் சொல்லியபோது இருந்ததைவிட இப்போது சொல்லியது. இன்னும் மிகவும் மங்கலாய்ப் போயிற்று. இளந்தென்றற் காற்றுச் சடுதியில் வீசிச் சென்றா லென்ன மெல்லச் சொல்லப்பட்ட அது சந்திரன் என்னும் பெயரே யெனக் குமுதவல்லி எண்ணினாளேனும் அசைவில்லா மலும், பேசாமலும் இருந்தாள்; உயிர் மறுபடியும் இடைவிட்டுத் திரும்புமே என்று பார்க்கவேண்டிக் குமுதவல்லி அளவிறந்த கவலையோடும் ஐயத்தோடும் காத்துக்கொண்டிருந்தாள். ஆனால், இமைப்பொழுதுகள் பலசென்றன- பின்னர் அவை நிமிஷங்களாயின ஆகியும் மீனாம்பாள் அசைந்திலன், பேசிற்றிலன்; அவள் வாயிலிருந்து இப்போது மிகச்சிறிய மூச்சுக் கூட வரவில்லை. சிறிய நோக்கத்திற்கு முன்னே அவள் கன்னங் களினின்றும் மறைந்துபோன செந்நிறமானது இப்போது அவள் இதழ்களினின்றும் பிரிந்துபோயிற்று; “மெய்யாகவே எல்லாம் முடிந்து போயிற்று." என்று குமுதவல்லி தனக்குள் முணு முணுத்தாள்.

மீனாம்பாள் தலையைப் பூக்கள் நிறைந்த புல்நிலத்தின் மேற் சோர்ந்து கிடக்கும்படி மெல்லென விட்டுவிட்டு, நாகநாட்டரசி தான் இதுவரையில் தாங்கிக்கொண்டிருந்த அவ்வுடம்பு தன்மேற் படாதபடி விலகிக்கொண்டாள். மூடப் பெற்ற கண்களோடு தனக்கெதிரில் அசைவின்றிக் கிடப்பதும், மேலே கவிந்திருக்கும் மரங்களின் திறப்பின் வழியே ஞாயிற்றி னொளிபட்டு ஆடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/216&oldid=1581489" இலிருந்து மீள்விக்கப்பட்டது