உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் – 13

ஐயமுங் கலக்கமுங்கொண்ட குமுதவல்லி, "உங்கள் கணவனைத் தவிர இன்னும் நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் வேறு எவரேனும் உண்டோ? சொல்லுங்கள் - ஓ, சொல்லுங்கள்: உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன், எனக்குச் சொல்லுங்கள்-” என்றாள்.

66

இப்போது மீனாம்பாளுக்கு விழிகள் சிறிது சிறிதாக மூடத் துவங்கின; அவள் குரல் மெலிந்து மங்கலாய்க் கேட்டது; அவள், "அந்தோ! இங்ஙனம் மாண்டு போவதா! - இங்ஙனம் மாண்டு போவதோ - இவ்வளவு இளம்பருவத்தில் - விளக்கமான கதிரவன் வெயில் வெளிச்சத்தில் - பறவைகள் மரங்களின் நடுவில் பாடிக் கொண்டிருக்க - மலர்கள் சுற்றிலும் இதழ் விரிந்திருக்க! இது சாக்காடுதானோ - அல்லது உறக்கந்தானோ என்னைவந்து அமிழ்த்துவது? குமுதவல்லி - நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று விட்டு விட்டு மெல்லப் பேசினாள்.

அதற்குக் குமுதவல்லி அமைதியாய், “நான் இங்கேதான் இருக்கிறேன், உங்கள் தலையைத் தாங்கிக்கொண்டிருக்கிறேன் என்று காதுக்குட் சொன்னாள்.

-

“நெடுந்தூரத்தேயுள்ள உலகங்களிற் கந்தருவமானிடத் திருந்துவரும் இரகசிய ஒலிபோல உங்கள் குரல் எனக்குக் கேட்கின்றது! உங்கள் மெல்லிய இனிய குரல் ஒலியிலிருந்து கடவுளின் திருவருள்நாதம் எனக்கு வருகின்றது! குமுதவல்லி, நான் இறந்து போகின்றேன் சில நிமிஷங்களில் எல்லாம் முடிந்துபோகும்! காலந்தாழாது நீங்கள் நீலகிரி நகரத்திற்குப் போகும்படி நான் உங்களை வேண்டிக்கொள்கின்றேன் குளிர்ந்துபோன பிணமாக யான் இங்கே நீட்டப்பட்டுக் கிடக்கும்போது என்கிட்ட ஒரு நொடிப்பொழுதானும் தங்கி யிராதீர்கள் நீங்கள் செல்லவேண்டிய வழியில் விரைந்து செல்லுங்கள் குமுதவல்லி எச்சரிக்கையா யிருங்கள் எச்சரிக்கையா யிருங்கள்-” என்று கடைசியிற் சில சொற்களைச் சொல்லக்கூடாமல் நிறுத்தினாள் மீனாம்பாள்.

6

-

மறுபடியும் பேசுவதற்கு மீனாம்பாள் வாயைத்திறந்து மேல்மூச்சு எறிந்தாள்: காதுக்குக் கேளாவிட்டாலும், எவையோ சில சொற்கள் அவள் உதடுகளின் மேல் தத்தளிப்பனபோற் காணப்பட்டன. குமுதவல்லி அவற்றைத் தெரிந்துகொள்வதற்கு

.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/215&oldid=1581488" இலிருந்து மீள்விக்கப்பட்டது