உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

❖ - 13❖ மறைமலையம் – 13

அழகாக ஒழுங்கு படுத்தப்பட்டுள்ள அறைகளின் வரிசைக்கு அவ்வம்மையால் அழைத்துக்கொண்டு போய் விடப்

பட்டாள்.

66

இந்த அறைகள் தாங்கள் இருப்பதற்காகவே சித்தஞ் செய்யப்பட்டிருக்கின்றன. செல்வத்திற் சிறந்தவரும் விருந் தோம்பும் இயல்பினருமான என் தலைவர் மனோகர் அவசர காரியத்தின் பொருட்டு இரண்டொரு நாளைக்கு இங்கே இருக்கக்கூடாதவராயினார்: ஆயினும், அவர் வெளியே போகும் போது, தாங்கள் இதனைத் தங்கள் சொந்தவீடாகப்பாவித்து வேண்டியவெல்லாம் செய்துகொள்ளும்படி கற்பித்துப்

போனார்.” என்று அம்முதியோள் கூறினாள்.

66

குமுதவல்லி விரைவில் மறைந்த ஏமாற்றப் பார்வையோடு அருமையுள்ள மனோகர் இங்கில்லாமை கேட்டு வருந்து கின்றேன்; என்றாலும், அவர் என் பொருட்டு இவ்வளவு அன்புகாட்டினமைக்கும், அவர் சொல்லியபடி நடத்தும் எனது அன்பான தன்மைக்கும் யான் நன்றி பாராட்டுகின்றேன்.” என்று கூறினாள்.

"பெருமாட்டி, தங்கள் விருப்பம் சிறிதாயிருந்தாலும் அதனை முன்னரே தெரிந்துகொள்ளுவதும், தங்கள் கட்டளை களை நிறைவேற்றி வைப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவனவாகும். இது, தாங்கள் தங்கள் நாட்டின்கண் மேன்மை யுடன் வாழ்பவர்களென்று மாட்சிமைபொருந்திய எந்தலைவர் சொன்னதனால் மாத்திரமன்று, தங்கள் இளமையும் அழகும் தன்னை நெருங்கப்பெற்றவர் எல்லார்க்கும் தங்களிடத்து இயற்கையாகவே பற்றுண்டாகும்படி செய்வதனாலேயாம். தங்கள் பாங்கிமாரே தங்களுடன் இருக்க வேண்டுமோ? அன்றி இவ்வீட்டிலுள்ளவர்களும் அவர்களுடன் சேர்ந்திருக்க வேண்டுமோ? அதனை அருளிச்செய்யுங்கள்." என்று அம் முதியவர் கேட்டாள்.

“என்னுடைய தோழிப்பெண்களே எப்போதும் என்பக்கத் திலிருக்கவேண்டும்; உன்னுடைய தலைவர் வரும்வரையில் இயன்ற மட்டும் யாங்கள் தனித்திருக்கவேண்டும்; இதுதான் என்மனத்திற்கு இசைந்தது." என்ற குமுதவல்லி அதற்கு எதிர்மொழி கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/225&oldid=1581498" இலிருந்து மீள்விக்கப்பட்டது