உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

66

அதற்கு அம்முதியோள் அப்படியே

197

யாகட்டும்,

பெருமாட்டி, இந்த மாளிகையின் முதன்மையான வாயிலுக்குச் செல்லும் படிக்கட்டை தாங்கள் முன்னமே தெரிந்திருக்கிறீர்கள்.; கவே, தாங்கள் நகரத்தினுள்ள நடந்துசெல்ல எண்ணப் பட்டாள், வெளியே போவதற்குரிய வழியை நீங்கள் அறிவீர் கள். இந்த வரிசையின் கடைசியிலுள்ள அதோ அந்த அறையிலே, கீழுள்ள தோட்டத்திற்குச் செல்லும் மறைவான படிக்கட்டுக்கு நுழைவாயில் இருக்கிறது; அந்தத் தோட்டத் திலே, பெருமாட்டி, பிறரால் உற்றுப்பார்க்கப்படும் அச்சம் இன்றி எந்த நேரத்திலும் தாங்கள் உலாவலாம். அந்தத் தோட்டத்திலிருந்துங்கூட நகரத்திற்குப்போக ஒருவாயிலிருக் கிறது; அந்த மறைவான வாசற் கதவின் திறவுகோல் யான் சற்று முன் குறிப்பிட்ட அறையினுள் இருக்கின்றது. சில நாள் தாங்கள் தங்க வேண்டியிருப்பதும், தாங்கள் இருக்கும் வரையில் கூடியமட்டும் அது தங்களுக்கு இசைவாகவும் இனிதாகவும் செய்யப்படவேண்டியதுமான இவ்விடத்திலுள்ள ஏற்பாடு களையும் நிலைமைகளையும் தாங்கள் உடனே தெரிந்து கொள்ளும் பொருட்டாகவே வைகளையெல்லாம் நான் சொல்லலானேன் என்று

இயம்பினாள்.

அவள்காட்டிய

அன்பின்

""

பலவகைகளுக்காகவும்

குமுதவல்லி அம்முதியோளுக்கு நன்றியறிதல் கூறினாள்; அதன்பின் அம்முதியோள் அவர்களை விட்டுப்போயினாள்.

-

குமுதவல்லி முதன்முதல் தன் அறைகளைப்போய்த் தேர்ந்து பார்த்தாள். அவ்வரிசையில் நான்கறைகள் இருந்தன முதலிலுள்ளது சொல்லாடுமிடம், அதனையடுத்த இரண்டு படுக்கையறைகள், கடைசியிலுள்ள குளியலுக்கும் உடுத்திக் கொள்வதற்கும் தகுதியாக்கப் பட்டதாகும். அங்கிருந்த தட்டு முட்டுகளெல்லாம் விலையுயர்ந்தனவாயும் நேர்த்தியாயும் இருந்தன; பொதுவான தளவாடங்களுங்கூடச் செலவேறப் பெற்றனவாயும், விலைமிகப் பெற்றனவாயும் இருந்தன. இப்போது தனது வருகையால் மலைநாட்டு வியாபாரியின் மாளிகைக்குப் பெருமையினை உண்டு பண்ணும் புகழ்பெற்ற அழகிய நங்கையின் வசதிக்கு வேண்டுவதொன்றும் குறைவு படவில்லை. குமுதவல்லி உடனே நீராடு வாளானாள்; பலரால் நெடுவழி வந்ததற்குப் பிறகு முக்கியமாய் இன்றைக்குப் புழுதிமிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/226&oldid=1581499" இலிருந்து மீள்விக்கப்பட்டது