உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

199

அவற்றின் இசைவினை மனமார மகிழ்ந்துரைப்பவே அவ்வம்மை போய்விட்டாள். அவ்வறை வரிசைகளின் வெளிக் கதவுகள் உடனே தாழிடப்பட்டன; குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் துயில்கொள்ளப் போயினர்.

தடையின்றி அவர்கள் திளைத்த துயிலானது இனிதாகி அயர்வு தீர்ப்பதாயிற்று; விடியற்காலத்தில் அவர்கள் உறக்கம் நீங்கி எழுந்த போது, இடர்மிகுந்த அவ்வழிப்பயணத்தின் பிறகு பாதுகாவல் அமைந்த புகலிடம் தமக்கு வாய்த்ததைப் பற்றித் தமக்குள் மகிழ்ந்து பேசிக்கொண்டார்கள். வெளிக்கதவுகள் திறக்கப்பட்டவுடனே வீற்றிருக்கும் நேர்த்தியான சிற்றுணவு களைப்பரப்பினர்; சாப்பாடு முடிந்தவுடனே குமுதவல்லி நல்லகாற்று வாங்குவதற்காகத் தோட்டத்தினுள் இறங்கக் கருதினாள். அம்முதியோள் சொல்லியபடியே, மறைவான ஒரு படிக்கட்டுக் குளியறையிலிருந்து கீழேயுள்ள அகன்ற பூந்தோட்டத்திற்குச் சென்றது; அப்பூந்தோட்டத்தின் ஒருபக்க ஓரத்தில் சரக்கறைகளும் மாளிகையுஞ் சேர்ந்த நீண்ட ஒரு கட்டிடவரிசையும், மற்ற மூன்று பக்க ஓரங்களிலும் உயர்ந்த சுவர் களும் இருந்தன. மலர்ப்பாத்திகளும், பசுங்கொடிபடர்ந்த நிழலுள்ள வாயில்களும், கொடிப்பந்தர்களும், நீருற்றுகளும் உள்ளனவாக அத்தோட்டம் அழகாகப் பண்படுத்தப் பட்டிருந் தது; கடைக்கோடியிலுள்ள சுவரிலே அவ்வம்மையாற் குறிப்பிக் கப்பட்டதும் நகரத்தில் ஒரு தெருவுக்கு வழியாயுள்ளதுமான மறைந்த நுழைவாயிலொன்று இருந்தது. முதலில்தாம் வந்து சேர்ந்தபோது தெருப்பக்கத்தேயுள்ள பகுதியைமாத்திரம் பார்த்து அவைசிற்றளவினவாக உறுதிப்படாமல் மதித்திருந்த குமுதவல்லியும் அவள்தோழிகளும் இப்போது மனோகரரின் கட்டிடங்களுடைய பேரளவினைக்கண்டு பெரிதும் வியப்புற்றார் கள். இப்போது அவர்கள் அக்கட்டிடங்களின் தன்மையையும் சாளரங்களின் அடுக்குகளையும் கண்டு அப்பெரிய மாளிகையின் பெரும்பகுதி செல்வத்திற்சிறந்த மனோகரர் தம்முடைய சரக்குகளை வைத்திருக்கும் பண்டக அறைகளை உடையதாகு மென்று சொல்லக்கூடிய தாயிருந்தது.

ம்

சில நாழிகைநேரம் குமுதவல்லியும் அவள் பாங்கிமாரும் அத் தோட்டத்தில் தங்கியிருந்தனர்; அழையாமல் வருவார் எவரும் அங்கில்லாமையால், நாகநாட்டின்கண் குமுதவல்லியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/228&oldid=1581501" இலிருந்து மீள்விக்கப்பட்டது