உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் - 13

மாளிகையை அடுத்துள்ள இன்ப இளங்காக்களில் இருப்பது போல அவர்கள் ஒருசிறிதும் அச்சமும் தடையுமின்றி யிருக்கப் பெற்றதனை உணர்ந்தார்கள். திரும்பவும் அவர்கள் வீட்டினுட் புகுந்தபோது, மறுபடியும் மேசைமேல் உணவு கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தது. அம்முதியோள் தனக்கெதிரே வரக் கண்டதும் குமுதவல்லி மனோகரர் திரும்பி வந்தனரா என்று வினவினாள். அவ்வம்மை அவர் வரவில்லையென்று விடை பகர்ந்து, ஆயினும் அவர் நாளைக்கு நீலகிரி வருவதாக உறுதிமொழிபுகன்று செய்தி அனுப்பியிருக்கிறார் என்றுரைத் தாள். தான் நாகநாட்டிலிருந்து அழைக்கப்பட்டதன் காரணத் தைப்பற்றிய ஐயுறவும் ஆவலும் விரைவில் நிறைவேறும் என்றெண்ணிக் குமுதவல்லி இச்செய்தியால் மன அமைதி பெற்றாள்.

-

மாலையில் ஐந்துநாழிகை ஆயிருக்கும் குமுதவல்லி மறுபடியும் தன்றோழிமாரோடு தோட்டத்தில் உலவியிருந்து வீட்டுக்குள் திரும்பிவந்தாள் அறையில் அம்முதியோள் வந்து,

66

-

அச்சமயத்தில் வீற்றிருக்கும்

“பெருமாட்டி, தாங்கள் மனம் உவந்தால் ஒருபெண் பிள்ளை தங்களைக் காணவிரும்புகிறாள்.” என்று கூறினாள்.

“எந்தப்பெண்பிள்ளை? நீலகிரியில் இந்த இல்லத்திற்குப் புறத்தே எனக்குப் பழக்கமுள்ளவர்கள் எவரும் இல்லையே.” என்று நாகநாட்டரசி கேட்டனள்.

66

"பெருமாட்டி, திகழ்கலை என்னும் பெயரைமொழிந்தால் தன்னைப் பார்ப்பதற்கு நீங்கள் ஐயுறமாட்டீர்கள் என்று அவள் சொல்லுகிறாள்." என்று அம்முதியோள் விடைகூறினாள்.

66

‘ஆ, திகழ்கலையா!” என்று வியந்து கூறிக் குமுதவல்லி ஒரு நொடியில் முன்னாள் நடந்த இடரிற் சம்பந்தமுற்ற அறிவோளை நினைவுகூர்ந்து, “ஆம் - நான் அவளைப் பார்க்கிறேன். அவளை வரவிடு.” என மொழிந்தாள்.

அம்முதியவள் அங்ஙனமேபோய்ச் சிறிதுநேரத்தில் திகழ்கலையைக் குமுதவல்லியின் எதிரே அழைத்து வந்தாள். அவ்வறிவோள் முந்தியநாளில் உடுத்தியிருந்தபடியே இருந் தனள்; ஆனால் இச்சமயத்தில் அவள்கையில் மருந்துகளும் உறை மருந்துகளும் அடங்கிய பெட்டி அடங்கிய பெட்டி கொண்டுவரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/229&oldid=1581502" இலிருந்து மீள்விக்கப்பட்டது