உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

201

அவள்தான் அணிந்திருந்த முக்காட்டைப் பின்னே வாங்கியதும் அவள் முகத்தில் ஒரு துயர்க்குறிப்புத் தோன்றியது; அவள் மீனாம்பாளைப்பற்றிப் பேசவே வந்தனளென்று குமுதவல்லி இயற்கையாக நினைந்தாள். திகழ்கலைமிகுந்த பணிவோடும் நம் தலைவியை வாழ்த்தி, “அழகிய நங்கையே, தாங்கள் இத்தனை கருக்கில் என்னைக்காண நினைத்திருக்கமாட்டீர்கள்." என்று புகன்றாள்.

“என்ன காரியமாய் இங்கே வந்தாய்? என்னை எந்த இடத்திற் காண்பதென்பதை நீ எங்ஙனம் தெரிந்து கொண்டாய்?” என்று நாகநாட்டரசி வினவினாள்.

இரண்டாவதுகேட்ட கேள்வியை மெல்ல நழுவவிட்டுப், 'பெருமாட்டி, புனிதமான புண்ணிய காரியத்தின்பொருட்டு யான் வந்திருக்கிறேன்.யான் புத்தமதத்தைச் சேர்ந்தனவாயினும், மலைய நாட்டார்க்குரிய கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும், மலையநாட்டார்க்குரிய அவைகளிற் பெரும்பாலன பேதைமையின் பான்மையென எனக்குத் தென்பட்டனவாயினும் எல்லாச் சமயக்கொள்கைகளினும் எனக்குப் போதுமான நன்குமதிப்பு இருக்கின்றது; அதனாலேயே இந்தத்தடவை தங்களுக்குத் தூதாகவரும்படி தூண்டப் பட்டேன்.” என்று திகழ்கலை விடைகூறினாள்.

குமுதவல்லி மறைபொருளான இச்சொற்களைக்கேட்டு வியப்பெய்தினவளாய், “நீ சொல்லுவதன் கருத்துயாது திகழ்கலை? எவரிடத்திருந்து தூதாக வருகின்றனை!?” என்று

கேட்டாள்.

66

இறந்தவரிடமிருந்து தூதாய் வருகின்றேன்!” என்று வெருக்கொள்ளத்தக்க விடைபகர்ந்தாள்.

குமுதவல்லியின் முகம் வெளிறினது னெனில், அம்மறுமொழியில் அச்சமும் திகிலும் கொள்ளத்தக்கது ஏதோ இருந்தது; ஆனாலும், அதற்கு உருவகப்பொருள் வேறிருக்க வேண்டுமென வினாவிற்கருதினவளாய்த், "திகழ்கலை, என்னிடத்தில் ஒட்டிவருவது உருவகத்திலாவது பேசாதிருக்கும் படி உன்னைக்கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்; இயன்ற மட்டும் நீ சொல்ல வேண்டியதைத் தெளிவாக விளக்கிச்சொல்” என்று கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/230&oldid=1581503" இலிருந்து மீள்விக்கப்பட்டது