உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுதவல்லி நாகநாட்டரசி

203

பட்டாலல்லாமல் அது பயன்படுவதில்லை யென்னும் ஒரு நம்பிக்கை உங்கள் காட்டில் எங்கள் சொந்த நாக நாட்டில் இருக்கிறதன்றோ?" என்று திகழ்கலை மறுமொழி கூறினாள்.

திகழ்கலை இப்பேச்சின் கடைசிப்பாகத்தைச் சொல்லிய போது குமுதவல்லியின் முகம் வணக்கமும் பயபத்திக்குறிப்பும் உடையதாயிற்று; இச்சொற்களைப் பயபக்தியோடு சேர்ந்த ஆவலுடன் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தராம்பாளும், மீனாம்பாளும் தம்முடைய தலைவி இப்போது தன் முகத்தில் காட்டிய குறிப்பைப் போலவே தமக்குள்ளுங் காட்டிக் கொண்டார்கள்.

தனது சமயக்கல்விகளின் இடையே இத்தகைய ஓர் ஆழ்ந்த நம்பிக்கையுடையவளான குமுதவல்லி இப்போது தானும் அதன் வயப்பட்டவளாகி மெல்லிய குரலில், "மேற்கணவாய் மலைப் பக்கத்திலுள்ளவர் அத்தனைபெயர்க்கும் மெய்யாக அந் நம்பிக்கை உண்டு தான் ஆகவே, திகழ்கலை, இப்போது எண்ணிக்கொண்டிருப்பதின்னதென ஒரு சிறிதுணர்கின்றேன்.’ என்று மொழிந்தார்.

அதனைத்தொடர்ந்து திகழ்கலை கூறுவாள். நல்வினை யற்ற மீனாம்பாள் விட்டுப்போன இரண்டு ஏவற்காரிகளான மலைநாட்டுப் பணிப்பெண்ணும், காப்பிரிமாதும் தம் அன்புள்ள தலைவியின் பிணத்தை நீலகிரிக்கு எடுத்து வந்திருக்கிறார்கள்; இறந்துபோகுந் தறுவாயில் உயிரோடிருந்த பெண்மகளின் அருகிலிருந்த நீங்கள் சொல்லிய மன்னிப்பு உறுதிமொழியை மறுபடியும் பிணத்தின் பக்கத்தில் வந்து சொல்லும்படி தங்களிடம் போய்த் தன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளுமாறு என்னை வேண்டினவள் அந்த மலைநாட்டுப் பணிப்பெண்ணே தான். எதன் பொருட்டுத் தங்கள் முன்னிலையில் யான் வந்திருக்கிறேனோ அந்தப் புதுமையான நம்பிக்கை எவ்வளவு தூரம் செல்லக்கூடுமென்பதைப், பெருமாட்டி என்னைவிடத் தாங்கள் நன்றாய் அறிவீர்கள். இறந்துபோன மீனாம்பாள் தங்களுக்கு எவ்வளவு தீங்கிழைத்தாலும் அல்லது இழைக்க நினைத்திருந்தாலும் அவற்றிற்காகத் தாங்கள் மொழிந்த மன்னிப்பு மொழிகள், உயிரற்ற அவள் பிணத்தருகேயிருந்து பயபக்தியோடு திரும்பவுஞ் சொல்லப்பட்டால் அல்லாமல்

ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/232&oldid=1581505" இலிருந்து மீள்விக்கப்பட்டது