உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் - 13

அவளுயிர்க்கு அமைதியைத் தரப்போத மாட்டாவாகும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவள்

குமுதவல்லி ஆழ்ந்த சிந்திப்பாளானாள் தோழிமார் இருவரும் தம் இளைய தலைவியின் முகத்தை திகிலோடும் ஐயுறவோடும் நோக்கிக் கொண்டிருந்தனர்.

கடைசியாகக் குமுதவல்லி திகழ்கலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் “கள்வர் தலைவனான நல்லானின் நல்வினையற்ற மனையாளது பிணம் எங்கே கிடக்கின்றது?” என்று கூறினாள்.

பெருமாட்டி, இங்கிருந்து நெடுந்தூரமில்லை.” என்று மறுமொழி தந்து, “அதோ அப்பக்கமாய் மூன்று அல்லது நான்கு தெருக்களுக்கு அப்பால்தான் என்று அவ்வறிவோள் அவ்வீட்டின் பின்பகுதியை நோக்கிச் சுட்டிக் காட்டினாள்.

மறுபடியும் குமுதவல்லி சிந்திப்பாளானாள்; மறுபடியும் அவள் பாங்கிமாரின் கண்கள் ஆவல்கொண்ட ஐயுறவோடும் அவள்மேற் பதிந்தன.

நெடுநேரம் பேசாமலிருந்த பிறகு குமுதவல்லி திரும்பவும் வாயைத்திறந்து, “நீ கேட்டுக்கொண்டபடி நடப்பதற்கு என்னுள் ளம் என்னைத்தூண்டுகின்றது. நீ பேசிக்கொண்டிருந்த நம்பிக் கையில் உண்மையிருக்கிறதென்று யான் மெய்யாகவே கற்பிக்கப் பட்டிருக்கின்றேன்." என்றுரைத்துப் பின்னும் அந்த தயாள குணம் அமைந்த இளைய நங்கை, ஓ! இறந்துபோன அவ்வுயிர்க்கு அமைதியைத் தரத்தக்கதெதனையும் யான் முழு திருப்பத்தோடு செய்வேன்! ஆனாலும், இஃது என்னைப் பிடிப்பதற்கு விரித்த வலையன்றென்று யான்மனங் கொள்வதெப்படி? யாம் இங்ஙனம் விட்டுச் சொல்வதற்காகத் திகழ்கலை, என்மேல் குற்றஞ் சால்லுதல் கூடாது. தீய எண்ணஞ் சிறிதும் இல்லா மலிருக்கக் கூடிய ஒருவர்மேல் யான் இங்ஙனம் ஐயுறுதல் பற்றி என்மேற் குற்றஞ் சொல்லுதல் கூடாது. உன்னுடைய நோக்கம் நல்லதாகவே யிருக்கலாம் - யானும் அஃது அப்படித்தான் என்று நம்புகிறேன் - என்றாலும் நீ அறியாமலும் உனது கண்சாடை இல்லாமலும் பிறர் கைக்கருவியாக்கப் பட்டிருக்கலாம்?”

அதுகேட்ட திகழ்கலை ஒடுக்கவணக்கம் மிக்க குரலில் பெரிதும் எண்மைதோன்றக் கூறுவாள்: “பெருமாட்டி யான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/233&oldid=1581506" இலிருந்து மீள்விக்கப்பட்டது