உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

  • குமுதவல்லி நாகநாட்டரசி

205

புனிதமாக நினைத்தவை யெல்லாம் அறியப் புத்தரும் அவர் சாரணரும் அறிய ஆணையிட்டுக் ய கூறுகின்றேன். யான் உங்களுக்குப் பொய்யறுவேனானால் இறந்துபோன எம் பெற்றோர் பிழைத்தேனாவேன் ஆதலால் அவர்கள் அறிய, இல்லாதல் யானாவது மற்றையோராவது உங்களிடத்து ஒரு சிறிதுந் தீய எண்ணம் வைத்திலேம் என்று ஆணையிட்டுக் கூறுகின்றேன். உங்கள் செழுங்கூந்தலில் ஒரு மயிரேனுந் தீங்குற யான் காண்பேன் அல்லேன்! ஏழை அறிவாட்டியிடம் நீங்கள் அன்போடு பேசினீர்களன்றோ - அலைந்து திரியும் திகழ் கலையை நீங்கள் புன்சிரிப்புகளால் நீங்கள் ஊக்கப் படுத்தினீர் களன்றோ - தானே பெருமை பாராட்டிப்பேசிய அவளது திறமை தவறிப் போன அச்சமயத்தில் அவளைத் தாங்கள் அருவருத்துத் தள்ள வேண்டுவதாயிருக்க, அப்போதும் அவளுக்குத் தங்கள் பொற் பணம் கொடுத்தீர்களன்றோ, அதுவன்றியும், பெரு மாட்டி, உங்களுக்குத் தீதுசெய்யக் கனவில் எண்ணுவதாயினும் அது வானுலகத்துள்ள ஒரு கந்தருவ மாதினோடு சண்டை யிடுத லையே ஒக்கும்:!”

திகழ்கலையின் பார்வையிலும் அவள் நடந்துகொண்ட வரையிலும் களங்கின்மை காணப்பட்டது; அதனால் அவள் பேசிய சொற்களும் அந்தன்மை யுடையவாகவே யிருந்தன; குமுதவல்லி மறுபடியும் சிறிது நேரம் எண்ணமிட்டுக் கொண்டிருந்தமையின், தன் இருக்கையினின்றும் எழுந்து, “யான் உன்னுடனே வருகிறேன்." என்று மொழிந்தாள்.

"பெருமாட்டி - அன்பிற் சிறந்த பெருமாட்டி!” என்று சுந்தராம்பாள் சொல்லிக்கொண்டே தன் தலைவியின் காலடி களில் வீழ்ந்து, “கொடும்புலிவாழுங் குகைக்குள் தாங்கள் செல்லா திருக்கும்படி தங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறேன்!” என்று மொழிந்தாள்.

அங்ஙனமே துன்புற்றுத் திகில்கொண்டஞானாம்பாளும் மண்டிக்காலிட்டுப் “பரிசுத்தமான எல்லாப் பொருள்களும் சான்றாகப் பெருமாட்டி தாங்கள் இங்கேயேயிருக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்! அலைந்து திரியும் ஒரு பௌத்தப் பெண்பிள்ளை தனக்கு உடன்பாடில்லாத சைவசமயக் கொள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/234&oldid=1581507" இலிருந்து மீள்விக்கப்பட்டது