உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மறைமலையம் - 13

கைக் குரிய காரியங்களில் அத்தனை பிரயாசை யெடுத்துக் கொள்வளென்று தாங்கள் நினைக்கிறீர்களா- என்று கூறுகையில்,

திகழ்கலை நடுவே புகுந்து, அலைந்து திரியும் ஏழைப் பௌத்தப் பெண் தன் மதத்தை இழித்துப்பேசுவோர் கொள்கை களையும் நன்கு மதிக்கின்றாள். என்று சினவாமல் அமைதி யோடும் துயரத்தோடுங் கூறினாள்.

66

“காரிகையீர் எழுந்திருங்கள், நீங்கள் எழுந்திடும்படி நான் ளையிடுகின்றேன்! என் பொருட்டு நீங்கள் கவலை யுற்றதற்காக நான் நன்றியறிதலுடையவளா யிருக்கின்றேன்; என்றாலும் யான் உறுதிசெய்துவிட்டேன் - என் விருப்பத்திற்குக் குறுக்குச் சொல்ல லாகாது,” என்று சொல்லுங் குமுதவல்லி ஏதோ ஒன்றைச் சடுதியில் நினைத்தவளாய்த் திகழ்கலையின் பக்கமாய்த்திரும்பி, ஆ! தற்செயலாகவேனும் என் கண் எதிர்ப்படும் படி-” எனக்கூறப்போகையில், அல்லறிவோள் அடக்க வொடுக்கத்தோடும் அழுத்தமாய் பகருவாள்: பெரு மாட்டி,யான் சொல்வதை உற்றுக்கேளுங்கள்! யான் தங்களை அழைத்துப் போகக் கருதியிருக்கும் இடத்தில் என் வாயி லிருந்தல்லாமல் வேறெவர் வாயிலிருந்தும் ஓர் எழுத்துக் கூட உங்களை நோக்கிப் பேசப்படமாட்டாது! என் கையைத் தவிர வேறெவர் கையும் உங்கள் மேற்படமாட்டாது! யான் கூறும் இக் கட்டுரைகளுக்குக் கௌதமசாக்கியரையும் அவர் சாரணரையும் மறுபடிய்ம் சான்றாக வைக்கின்றேன்!

66

அங்ஙனமாயின் யான் உன்னுடன் வருகிறேன்.” என்று கூறிய குமுதவல்லி அதன்பின் பாங்கிமாரை நோக்கி “மாதர்கள் நீங்கள் என்னுடன் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளு கிறேன்-” என மொழிகையில்,

சுந்தராம்பாள், “ஆம், பெருமாட்டி, நாங்கள் தங்களோடு செல்வோம்! எங்களுக்காகவன்று நாங்கள் அச்சமுறுவது,” என்று கூறினாள்.

66

ஆண்டவன் தடைசெய்வானாக! ஏதேனும் இடர் நேருமாயின் எங்கள் அன்புள்ள பெருமாட்டியோடு நாங்களும் அதனைச் சேர்ந்து அனுபவிப்போம்!” என்று ஞானாம்பாள் உரைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/235&oldid=1581508" இலிருந்து மீள்விக்கப்பட்டது