உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 13.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

குமுதவல்லி நாகநாட்டரசி

207

தங்களுக்கு விருப்பமானால், பெருமாட்டி, இவர்கள் உங்களோடு வரலாம்” என்று திகழ்கலை மொழிந்தாள்.

6

அவ்வறிவோளின் உண்மை யொழுக்கத்தை மெய்ப் பித்தற்கு இது மற்றுமொரு சான்றாகத் தோன்றியது; ஆயினும் தன்தோழிமாரில் ஒருத்தியையே தன்னுடன் அழைத்துக் காண்டு செல்லக் குமுதவல்லி தீர்மானித்தாள்; ஏனென்றால், உண்மையிலே ஏதேனும் இரண்டகமான ஏற்பாடு செய்யப் பட்டிருக்குமானால், தன் தலைவியும் மற்றைத்தோழியும் ஏமாற்றிக் கொண்டு போகப்பட்ட வகைகளை விரித்துக் கொள்வதற்கு ஒருத்தி தனக்குப்பின் இங்கேயிருக்க வேண்டு மென்று தீர்மானஞ்செய்தாள்.

அதற்கு இணங்கவே அவள், “சுந்தராம்பாள், நீ என்னோடு வா; ஞானாம்பாள், நீ நாங்கள் திரும்பிவருமளவும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும். இவ்விடுதியினின்றும் இதனைச்சேர்ந்த வீடுகளினின்றும் நாங்கள் யாரும் அறியாமற்போய் வருவதற்கு நல்லகாலமாய் எனக்கு வழிகிடைத்திருக்கிறது. ஞானாம்பாள், நீ இந்த அறையில் இரு. யான் இல்லாதபொழுது இவ்வீட்டு முதியோள் இங்கு வந்தால் யான் சிறிது நேரத்திற்கு என் அறையில் தனியே யிருக்கப் போனேன் என்று சொல் சுந்தராம்பாள், என்னோடு வா! திகழ்கலை யான் ஆயத்த மாயிருக்கிறேன்!" எனப் பகர்ந்தாள்.

ஞானாம்பாள், தன் இளைய தலைவியின் கையைப் பிடித்துத் தன் விழிகளினின்றும் நீர் ஒழுக அதன்மேல் முத்தம் வைத்தாள்; ஏனென்றால், தான் குமுதவல்லியை இனி என்றுங் காணாதவாறு பிரிந்து போவதாகவே நம்பிக்கையும் அன்பும் வாய்ந்த அப்பெண் எண்ணினாள்.

“என் மாதே, மடமையால் வருந்தாதே." என்று நாக நாட்டரசி கூறினாள்; தன் சொற்கள்அவளைக் கடிந்து கொள்வது போற் காணப்பட்டாலும், அன்போடும் விருப்பத்தோடும் தன் கையால் அவளது கையைப்பிடித்து அணைத்துக் கொண்டாள்; தான் மிக்க மனத்திண்மை யோடிருந்தும் இவள் தன் கண்களி னின்றும் நீர் ததும்பாமல் தடை செய்யக் கூடவில்லை.

திகழ்கலை பின்னேவர இவள் அவ்வறையைவிட்டு விரைந்து போயினாள்; சுந்தராம்பாளோ தன்னுடன் றோழியாகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_13.pdf/236&oldid=1581509" இலிருந்து மீள்விக்கப்பட்டது